This Article is From Jun 01, 2020

ஒரு வாரத்துக்கு எல்லையை மூடும் டெல்லி; அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட கெஜ்ரிவால்!

ஹரியானா அரசு, டெல்லி - குர்கான் எல்லையைத் திறந்தது. இப்படிப்பட்ட சூழலில்தான் கெஜ்ரிவாலின் அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ஒரு வாரத்துக்கு எல்லையை மூடும் டெல்லி; அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட கெஜ்ரிவால்!

Coronavirus Lockdown: டெல்லியின் இன்னொரு பக்க எல்லையில் உத்தர பிரதேசத்தின் நொய்டா உள்ளது.

New Delhi:

இந்தியத் தலைநகர் டெல்லியில் எல்லைகள் ஒரு வார காலத்துக்கு மூடப்பட உள்ளதாக அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அடிப்படை சேவைகள் மற்றும் பயணத்துக்கான அரசு அனுமதியளித்த ஆவணங்கள் இருப்பவர்கள் மட்டுமே டெல்லிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார் கெஜ்ரிவால்.

மத்திய அரசு, நாடு முழுமைக்கும் கொரோனா பரவலைத் தடுக்க போட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை இன்று முதல் தளர்த்தி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஹரியானா அரசு, டெல்லி - குர்கான் எல்லையைத் திறந்தது. இப்படிப்பட்ட சூழலில்தான் கெஜ்ரிவாலின் அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

டெல்லியின் இன்னொரு பக்க எல்லையில் உத்தர பிரதேசத்தின் நொய்டா உள்ளது. அந்த எல்லையும் கொரோனா பரவலை மட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த ஏப்ரல் மாதம் மூடப்பட்டது. 

எல்லைகளை மூடும் முடிவு குறித்து கெஜ்ரிவால், “டெல்லியின் எல்லைகளைத் திறக்கும் அடுத்த கணம், நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் மருத்துவம் பார்த்துக் கொள்ள இங்கு குவிந்துவிடுவார்கள். டெல்லி மருத்துவமனைகள், டெல்லிவாசிகளுக்கு சிகிச்சையளிப்பதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்,” என்று பேசியுள்ளார்.

இதுவரை டெல்லியில் 20,000 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் இதுவரை 473 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மட்டும் புதிதாக 1,000 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

கெஜ்ரிவால் மேலும் பேசுகையில், “உங்கள் குடும்பத்தில் யாருக்காவது நோய்த் தொற்று இருக்கிறது என்றால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவமனைப் படுக்கை இருக்கும் என்பதை முதல்வராக உறுதி கூறுகிறேன்,” என்றார். இன்று முதல் மாநிலங்களுக்கு இடையில் அத்தியாவசியமற்ற போக்குவரத்துக்கு அனுமதி கொடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


 

.