This Article is From Jun 10, 2019

118.4 டிகிரியில் கொதிக்கும் டெல்லி! 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில்!!

டெல்லியில் கடந்த 3 மாதங்களாக வெயில் கொளுத்தி வருகிறது. தற்போது அதிகபட்ச வெயில் அங்கு பதிவாகியிருக்கிறது.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

New Delhi:

டெல்லியில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 118.4 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. வட இந்தியா முழுவதும் அனல்  காற்று வீசி வரும் நிலையில்  வெயிலும் அதிகமாக இருப்பதால்  மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

டெல்லியின் பாலம் பகுதியில்தான் இந்த அதிகபட்ச வெயில் பதிவாகி இருக்கிறது. முன்னதாக கடந்த 2014, ஜூன் 9-ம்தேதி 117 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்தது. 

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக  உலகின் வெப்பமான 15 இடங்களில் 11 இடங்கள் இந்தியாவில் உள்ளதாக  ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 

தமிழகத்தை பொறுத்தளவில் அடுத்த 3 நாட்களுக்கு அனல்  காற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

.