বাংলায় পড়ুন Read in English
This Article is From Jun 14, 2020

கெஜ்ரிவாலுடன் அமித்ஷா இன்று சந்திப்பு! கொரோனா பரவல் குறித்து கலந்துரையாடல்!!

இன்று காலை 11 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில், கவர்னர் அனில் பைஜால், எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்) இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் அலுவலகம் நேற்று ட்வீட் செய்திருந்தது. 

Advertisement
இந்தியா

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் புதன்கிழமை சந்தித்தனர். (கோப்பு)

New Delhi:

தேசிய தலைநகரான டெல்லியில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் டெல்லி தேசிய அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் டெல்லி அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மறு ஆய்வுக்கு உட்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்  டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் இன்று காலை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்கவுள்ளனர்.

முன்னதாக இரண்டு நாட்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றம், டெல்லி மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் விலங்குகளைவிட மோசமாக நடத்தப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொற்று கட்டுப்படுத்துவது குறித்து கடந்த இந்த வாரத்தில் நடக்கும் இரண்டாவது இது சந்திப்பாகும்.

இன்று காலை 11 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில், கவர்னர் அனில் பைஜால், எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்) இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் அலுவலகம் நேற்று ட்வீட் செய்திருந்தது. 

முன்னதாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா மற்றும் ஹர்ஷ் வர்தன் ஆகியோருடன் கொரோனா தொற்று பரவல் குறித்து கலந்துரையாடலை மேற்கொண்டார். இதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிகரித்து வரும் தொற்று பரவல் எண்ணிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக இந்தியா தற்போது கொரோனா பாதித்த உலக நாடுகளின் வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது.

Advertisement

இந்நிலையில், தொற்றுநோயை கையாளும் விதம் குறித்தும், மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றாதது குறித்தும் ஆம் ஆத்மி அரசை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. டெல்லியில் நிலைமை கொடூரமானது, பரிதாபகரமானது. டெல்லி மருத்துவமனைகளில் மிகவும் வருந்தத்தக்க நிலைமை உள்ளது. அங்கு உடல்களுக்கு உரிய கவனிப்பும், அக்கறையும் கொடுக்கப்படுவதில்லை. நோயாளிகளின் குடும்பத்தினருக்கு உயிரிழப்புகள் குறித்து கூட தெரிவிக்கப்படுவதில்லை. இதனால், சில சந்தர்ப்பங்களில் நோயாளிகளின் குடும்பங்கள் இறுதி சடங்குகளில் கூட கலந்துகொள்ள முடியவில்லை. என நீதிமன்றம் கூறியிருந்தது. அதேபோல், டெல்லி தவிர்த்து, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்திலும் நிலைமை மிகவும் மோசமானதாக உள்ளது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இந்த மூன்று மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லியில் வசிப்பவர்களுக்கே டெல்லி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்படும் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். இந்த உத்தரவினை டெல்லி கவர்னர் ரத்து செய்துள்ளார். அதே போல தொற்று அறிகுறி உள்ளவர்களை மட்டுமே சோதிக்க வேண்டும் என்கிற உத்தரவையும் மாற்றி அமைத்துள்ளார்.

Advertisement
Advertisement