நேற்று மட்டும் டெல்லியில் 1,295 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
New Delhi: தலைநகர் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாளில் மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் டெல்யில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஏற்பட்ட புதிய பாதிப்புகளால் டெல்லியில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 20,834 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடும், 3-வது இடத்தில் டெல்லியும் உள்ளன.
டெல்லியில் கடந்த 34 மணி நேரத்தில் மட்டும் 268 பேர் குணம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் குணம் அடைந்தவர்களை தவிர்த்து டெல்லியில் தற்போது 11,565 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வருகிறார்கள்.
நேற்று மட்டும் டெல்லியில் 1,295 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, டெல்லியில் எல்லைகள் ஒரு வார காலத்துக்கு மூடப்பட உள்ளதாக அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அடிப்படை சேவைகள் மற்றும் பயணத்துக்கான அரசு அனுமதியளித்த ஆவணங்கள் இருப்பவர்கள் மட்டுமே டெல்லிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார் கெஜ்ரிவால்.
மத்திய அரசு, நாடு முழுமைக்கும் கொரோனா பரவலைத் தடுக்க போட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை இன்று முதல் தளர்த்தி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஹரியானா அரசு, டெல்லி - குர்கான் எல்லையைத் திறந்தது. இப்படிப்பட்ட சூழலில்தான் கெஜ்ரிவாலின் அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.