உலக அளவில் இந்தியா இன்று ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி 3 வது இடத்திற்கு சென்றுள்ளது.
ஹைலைட்ஸ்
- கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 823 ஆக உள்ளது.
- மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 72,088 ஆக உயர்ந்தது
- கொரோனாவுக்கு டெல்லியில் ஒட்டுமொத்தமாக 3,115 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான டெல்லியில், மொத்த பாதிப்பு இன்று ஒரு லட்சத்தை தாண்டியது.
இன்று மாலை நிலவரப்படி கொரோன பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 823 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 1,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இன்று மட்டும் 749 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார்கள். மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 72,088 ஆக அதிகரித்திருக்கிறது.
கொரோனாவுக்கு டெல்லியில் ஒட்டுமொத்தமாக 3,115 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 48 பேர் பலியாகினர்.
கொரோனா பாதிப்புக்கு பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலனை அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் 14 நாட்களுக்கு பின்னர் தங்களது பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வர வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
உலக அளவில் இந்தியா இன்று ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி 3 வது இடத்திற்கு சென்றுள்ளது. கொரோனா பாதிப்பில் 15 லட்சம் பேருடன் பிரேசில் இரண்டாவது இடத்திலும், 28 லட்சத்திற்கும் அதிகமானோருடன் அமெரிக்கா முதல் இடத்திலும் இருக்கிறது.
இதனால் அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளில் ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், வழிபாட்டு மையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்டவை கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.