This Article is From Feb 11, 2020

'வெற்றி கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடிக்க கூடாது' - தொண்டர்களுக்கு கெஜ்ரிவால் உத்தரவு

ஏற்கனவே டெல்லியில் காற்று மாசு இருக்கும் சூழலில், பட்டாசு வெடித்தால் அது மாசை இன்னும் அதிகரிக்கச் செய்யும். இதனை கருத்தில் கொண்டு பட்டாசை தவிர்த்துள்ளார் கெஜ்ரிவால். 

Advertisement
இந்தியா Edited by

தேர்தலின்போது, டெல்லியின் காற்று மாசை குறைப்போம் என ஆம் ஆத்மியின் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

New Delhi:

நடந்த முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மகத்தான வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், வெற்றிக் கொண்டாட்டத்தின்போது தொண்டர்கள் யாரும் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று, டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதனை ஏற்று,தொண்டர்கள் பட்டாசை தவிர்த்துள்ளனர். ஆனால் இனிப்புகளை வாங்கி வழங்கியும், ஆரத் தழுவியும் அவர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். 

ஏற்கனவே டெல்லியில் காற்று மாசு இருக்கும் சூழலில், பட்டாசு வெடித்தால் அது மாசை இன்னும் அதிகரிக்கச் செய்யும். இதனை கருத்தில் கொண்டு பட்டாசை தவிர்த்துள்ளார் கெஜ்ரிவால். 

Advertisement

தற்போதுள்ள நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி 63 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இவற்றில் ஒரு சில தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவை பொறுத்தளவில் 7 தொகுதிகளில் அக்கட்சி முன்னிலை வகிக்கிறது.

கடந்த 2015 சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.

Advertisement

இந்த தேர்தலின்போது, டெல்லியின் காற்று மாசை குறைப்போம் என ஆம் ஆத்மியின் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

Advertisement