டெல்லி முதல்வராக கெஜ்ரிவால் மீண்டும் பொறுப்பேற்கவுள்ளார்.
New Delhi: டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கும், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில்,'டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக ஆம் ஆத்மி கட்சிக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். டெல்லி மக்களின் எதிர்பார்ப்புகளை அவர்கள் பூர்த்தி செய்வதற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார்.
டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளி வந்து கொண்டிருக்கும் சூழலில் ஆம் ஆத்மி கட்சி, 60-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2015-ல் அக்கட்சி மொத்தம் உள்ள 70-ல் 67 தொகுதிகளை கைப்பற்றியது.
சுமார் 55 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்திருந்த பாஜகவுக்கு 10 இடங்களுக்கும் குறைவான தொகுதிகளிலேயே வெற்றி கிடைக்கும் என தெரிகிறது.