This Article is From Feb 11, 2020

'எங்களுக்கல்ல; பாஜகவுக்குத்தான் தோல்வி'- டெல்லி தேர்தல் முடிவு குறித்து காங். தலைவர் கருத்து

2015 டெல்லி சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்ற பெறவில்லை.

'எங்களுக்கல்ல; பாஜகவுக்குத்தான் தோல்வி'- டெல்லி தேர்தல் முடிவு குறித்து காங். தலைவர் கருத்து

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.

Chandigarh:

தோல்வி எங்களுக்கல்ல; பாஜகவுக்குத்தான் தோல்வி என்று டெல்லி தேர்தல் முடிவுகள் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், பஞ்சாப் மாநில அமைச்சருமான சாது சிங் தரம்சோத் கூறியுள்ளார். 2015 தேர்தலிலும், இந்த தேர்தலிலும் தனது கட்சி ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்றும்  அதனால் தோல்வி பாஜகவுக்குத்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவு குறித்த அவர் அளித்த பேட்டியில்,'நாங்கள் முன்பு நடந்த தேர்தலிலும் பூஜியமாகத்தான் இருந்தோம். இந்த தேர்தலிலும் நாங்கள் பூஜியம்தான். எனவே இது எங்களுக்கு நேர்ந்த தோல்வி அல்ல. பாஜகவுக்கு கிடைத்த தோல்வி.' என்று தரம்சோத் கூறினார். 

2015 டெல்லி சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்ற பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பஞ்சாப் மாநில எதிர்க்கட்சி தலைவரான ஆம் ஆத்மி கட்சியின் ஹர்பால் சிங் சீமா, 'டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வெறுப்பு மற்றும் அருவருப்பான அரசியலையும் தாண்டி தனது வளர்ச்சி திட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது' என்று பாராட்டியுள்ளார். 

பஞ்சாப் சட்டமன்றத்தில் மொத்தம் 117 உறுப்பினர்கள் உள்ளனர். இங்கு ஆம் ஆத்மிக்கு 19 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். பஞ்சாப் மாநில எதிர்க்கட்சியாக ஆம் ஆத்மி விளங்குகிறது. 

தற்போதைய நிலவரப்படி டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 62 இடங்களில் முன்னிலை/ வெற்றியை பெற்றுள்ளது. பாஜக 8 தொகுதிகளில் முன்னிலை/வெற்றியை பெற்றுள்ளது. 

.