This Article is From Feb 12, 2020

'சேவைக்கு டெல்லி மக்கள் பரிசளித்துள்ளனர்' - ஆம் ஆத்மியை பாராட்டும் பாஜக கூட்டணி கட்சி!!

டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70-ல் 62 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜகவுக்கு 8 இடங்கள் கிடைத்துள்ளன.

Advertisement
இந்தியா Edited by

பாஜகவின் கூட்டணி கட்சியான லோக் ஜன சக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் ஆம் ஆத்மிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

New Delhi:

டெல்லியில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றிருக்கும் நிலையில் அக்கட்சியை பாஜகவின் கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி பாராட்டியுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பீகாரை மையமாக கொண்டு செயல்படும் லோக் ஜன சக்தி கட்சி அங்கம் வகிக்கிறது. இதன் மூத்த தலைவரான ராம் விலாஸ் பாஸ்வான் மத்திய உணவுத்துறை அமைச்சராக உள்ளார். கட்சி பொறுப்புகளை அவரது மகன் சிராக் பாஸ்வான் கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் டெல்லி தேர்தல் குறித்து சிராக் பாஸ்வான் தனது ட்விட்டர் பதிவில், 'மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி வாக்குகளை பெற்றதுபோன்று டெல்லி சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குகளை பெற்றுள்ளார். அவரது மக்கள் சேவைக்கு மக்கள் பரிசளித்துள்ளனர். அவருக்கு எனது வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார். 

பீகாரின் முதல்வரும், பாஜக கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமார் 'ஜனதா மாலிக் ஹே (மக்கள்தான் எஜமானர்கள்)' என்று கூறியுள்ளார்.

Advertisement

பீகார் மாநிலத்தில் இந்தாண்டு கடைசியில் தேர்தல் நடக்கவுள்ளது. 

கடந்த மக்களவை தேர்தலில் பாஜக மகத்தான வெற்றியை பெற்ற சூழலில், டெல்லி தேர்தலில் அடைந்த தோல்வி அக்கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

Advertisement
Advertisement