Delhi Election Results 2020: 2015 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலிலும் ஆம் ஆத்மி, மொத்தம் இருக்கும் 70 தொகுதிகளில் 67-ல் வெற்றியடைந்தது. மீதமிருந்த 3-ஐ பாஜக கைப்பற்றியது.
Delhi Election Results 2020: டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக, முந்தைய சட்டமன்றத் தேர்தலைவிட அதிக இடங்களைப் பிடிக்கும் எனத் தெரிகிறது. ஆனால், காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட ஜெயிக்க வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை. 1998 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை, ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ், டெல்லியில் தொடர்ந்து 3 முறை வென்று ஆட்சி அரியணை ஏறியது. ஆனால், இன்றைய தேர்தல் முடிவுகளில் காங்கிரஸுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
2015 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலிலும் ஆம் ஆத்மி, மொத்தம் இருக்கும் 70 தொகுதிகளில் 67-ல் வெற்றியடைந்தது. மீதமிருந்த 3-ஐ பாஜக கைப்பற்றியது.
இன்றைய தேர்தல் முடிவுகளால் காங்கிரஸ், சமூக வலைதளங்களில் கேலிப் பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக பாஜகவும் ஆம் ஆத்மி கட்சியும் பல இடங்களில் மல்லுக்கட்டி வருகின்றன. இந்த சூழலுக்குக் காரணம் காங்கிரஸ் என்றும் ஒரு சாரர் கிண்டல் செய்து வருகின்றனர்.
முடிவுகள் வந்துள்ளதைத் தொடர்ந்து டெல்லி காங்கிரஸின் முக்கியப் புள்ளிகளில் ஒருவரான சஞ்சய் ஜா, “தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று சொல்லப் போவதில்லை. இனி செயலில் இறங்க வேண்டும்,” என்றார். அவரின் வாதத்தைப் பல முன்னணி தலைவர்களும் ஏற்றுள்ளனர்.
ஷீலா தீட்சித் இல்லாமல் காங்கிரஸ், டெல்லியில் தடுமாறி வருவதாக அக்கட்சியைச் சேர்ந்த பலரும் கருதுகின்றனர். டெல்லியில் வளர்ச்சியின் முகமாக அறியப்பட்டவர் தீட்சித். சென்ற ஆண்டு அவர் இயற்கை எய்தியைதைத் தொடர்ந்து காங்கிரஸ், டெல்லியில் திணறி வருகிறது.
“காங்கிரஸைப் பொறுத்தவரை ஷீலா தீட்சித் இல்லாதது மிகப் பெரிய பின்னடைவு. அவரைப் போல ஒருவரை எங்களால் நிர்வாகத்தில் போட முடியவில்லை.
அதே நேரத்தில் பாஜக வெற்றி பெறவில்லை என்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சிதான். ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி என்பது அவ்வளவு பெரிய பின்னடைவு இல்லை. கல்வித் துறையில் ஆம் ஆத்மி சில நல்ல மாற்றங்களைச் செய்துள்ளது,” என்று வெளிப்படையாக பேசியுள்ளார் அபிஷேக் மனு சிங்வி.