தலைமை பிரச்சினைகளையே தீர்த்து வைக்க முடியவில்லை என காங்கிரஸ் தலைவர் சஞ்சய் ஜா கூறியுள்ளார்.
ஹைலைட்ஸ்
- 2015 ஆம் ஆண்டு தேர்தலிலும் ஆம் ஆத்மிதான் வெற்றி பெற்றது
- 1998-2013 வரை காங்கிரஸ்தான் டெல்லியில் ஆட்சியில் இருந்தது
- 2015 ஆம் ஆண்டும் காங்கிரஸ், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை
New Delhi: டெல்லியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிகையில் கடந்த தேர்தல் போலவே இந்த முறையும் ஒரு இடத்தில் கூட காங்கிரஸால் வெற்றி பெற முடியவில்லை. முன்னதாக, ஷீலா தீட்சித் தலைமையின் கீழ் கடந்த 1998 முதல் 2013 வரை தொடர்ந்து மூன்று முறை ஆட்சி செய்த காங்கிரஸ் இரண்டாவது முறையாக ஒரு தொகுதியை கூட கைப்பற்ற முடியாமல் திணறி வருகிறது.
தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலை பெற்று தனது இடத்தை தக்க வைத்துள்ளது. பாஜகவும் கடந்த 2015 தேர்தலை ஒப்பிடுகையில் கனிசமான தொகுதிகளை கைப்பற்றி வருகின்றன.
கடந்த 2015 சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 இடங்களில் 67 இடங்களை கைப்பற்றியது. அப்போதும், காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதைத்தொடர்ந்து, சமூகவலைதளங்களில் காங்கிரஸை வைத்து மீம்ஸ் மூலம் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஒரே பங்கு என்னவென்றால், அதன் பரம எதிரியான பாஜகவுக்கு பல இடங்களில் உதவுவியது தான், ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளை குறைத்து அதன் விளிம்பு நிலையைக் குறைப்பதுமே காங்கிரசின் பங்கு என ட்வீட்டரில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இதேபோல், டெல்லியில் காங்கிரஸ் அதே நிலையை தக்கவைத்து வருகிறது என்றும் பலரும் கலாய்த்து வருகின்றனர். இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சஞ்சய் கூறும்போது, 'சுயபரிசோதனை'செய்து கொள்கிறோம் என்ற வார்த்தையை இன்று பயன்படுத்த மாட்டோம் என்பதை நாங்கள் உறுதியாக கூறுகிறோம் என்றார்.
தலைநகரின் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமான மூன்று முறை முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை நாங்கள் தற்போது கடுமையாக இழந்து தவிக்கிறோம் என்பதை காங்கிரஸ் தலைவர்கள் பலர் ஒப்புக்கொண்டனர். டெல்லி காங்கிரஸில் ஒரு பெரும் வெற்றிடத்தை விட்டுவிட்டு ஷீலா தீட்சித் கடந்த ஆண்டு உயிரிழந்தார்.
ஷீலா தீட்சித் போன்ற உன்னதமான தலைவரை நிச்சயம் நாங்கள் இழந்து தவிக்கிறோம். அதேபோன்ற அடுத்த ஒரு தலைவரை எங்களால் தேர்வு செய்ய முடியவில்லை என்று மூத்த தலைவர் அபிசேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெறவில்லை என்பதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். ஆம் ஆத்மியின் வெற்றி தான் லேசான அதிருப்தியை ஏற்படுத்துகிறது. ஆம் ஆத்மி கல்வியில் சில சிறப்பான பணிகளை செய்துள்ளன என்றும் அவர் கூறினார்.