This Article is From Feb 11, 2020

'இந்தியாவின் ஆன்மாவை பாதுகாக்கும் டெல்லி வாக்காளர்களுக்கு நன்றி' - பிரசாந்த் கிஷோர்!!

Delhi election results 2020: இந்தியாவின் ஆன்மாவை பாதுகாத்த டெல்லி வாக்காளர்களுக்கு நன்றி என்று பிரபல தேர்தல் திட்ட வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ட்வீட் செய்துள்ளார்.

'இந்தியாவின் ஆன்மாவை பாதுகாக்கும் டெல்லி வாக்காளர்களுக்கு நன்றி' - பிரசாந்த் கிஷோர்!!

Delhi election results 2020: டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மிக்கு பிரசாந்த் கிஷோர் திட்டம் வகுத்து தந்துள்ளார்.

New Delhi:

டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைமக்கவுள்ளது. இதையொட்டி அக்கட்சிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இந்த தேர்தலில் ஆம் ஆத்மியின் தேர்தல் திட்ட வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் செயல்பட்டார். ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பதிவில், 'இந்தியாவின் ஆன்மாவை பாதுகாக்க எழுந்து நிற்கும் டெல்லி வாக்காளர்களுக்கு நன்றி' என்று கூறியுள்ளார். 

கிஷோருக்கும் பாஜகவுக்கும் இடையே குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. டெல்லி தேர்தலில் குடியுரிமை சட்டத்தை மையப்படுத்தி பாஜக தேர்தல் யுக்திகளை வகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து அக்கட்சியின் தேசிய துணைத் தலைவராக இருந்த பிரசாந்த் கிஷோர் நீக்கப்பட்டார். இதற்கும் குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரங்களில் அவர் கொண்டிருந்த கருத்து வேறுபாடு முக்கிய காரணம் ஆகும். 
 

.

டெல்லியில் குடியுரிமை சட்டதிருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடான என்.ஆர்.சி.க்கு எதிராக போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றன. இதனை எதிர்த்து மக்கள் மத்தியில் ஆதரவு திரட்டம் நோக்கத்தில் பாஜக தலைவர்கள் செயல்பட்டனர். 

பொதுவெளியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலே தீவிரவாதி என்று மத்திய அமைச்சரால் அழைக்கப்பட்டிருந்தார். இந்த சூழலில் ஆம் ஆத்மி கட்சி மகத்தான வெற்றியை டெல்லி தேர்தலில் பெற்றுள்ளது. 

இதுகுறித்து மம்தாபானர்ஜி தனது ட்விட்டர் பதிவில், 'மக்கள் பாஜகவை நிராகரித்து விட்டார்கள். வளர்ச்சி மட்டும்தான் மக்களிடத்தில் வேலை செய்யும். குடியுரிமை சட்ட திருத்தம், என்.ஆர்.சி., என்.பி.ஆருக்கு இங்கு இடமில்லை' என்று கூறியுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியா தத், 'அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் வாழ்த்துக்கள். வெறுப்பு, பிரிவினவாத பேச்சுக்கள் நிலவம் சூழலில் மக்கள் நிலையான அரசை விரும்பியுள்ளனர். டெல்லிக்கும், டெல்லி மக்களுக்கு ஆம் ஆத்மி கட்சி நல்லது செய்துள்ளது. அவை இந்த தேர்தலில் அக்கட்சிக்கு வெற்றியை தேடித்தந்துள்ளன. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார்.
 

:

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா, 'அரசியலில் ஒரு வாய்ப்பு கிடைத்தால் மக்களுக்காக தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்பதுதான் உண்மையான தேச பக்தி. கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றில் நாங்கள் சிறப்பாக செயலாற்றினோம். ஒரு அரசு மக்களுக்காக உண்மையாக உழைத்தால் அந்த அரசு நிச்சயம் வெற்றி பெறும் என்பதை டெல்லி நிரூபிக்கும்' என்று கூறியுள்ளார். 

.