This Article is From Oct 05, 2018

டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து கோரும் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

நீதிபதிகள் மதன் பி லோகுர், அப்துல் நசீர், தீபக் குப்தா ஆகியோர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

Advertisement
இந்தியா Posted by

ஜூலை 4-ம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பிலும் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது

டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி வழக்கறிஞர் தெபசிஸ் மிஸ்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், டெல்லி தொடர்பாக உள்ள அரசியலமைப்பு சட்டப் பிரிவு 239 ஏஏ -வை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும், தேசிய தலைநகர் சட்டம் 1991-யை அரசியலமைப்பு சாராதது என்று அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

மேலும், டெல்லி ஒரு முழு யூனியன் பிரதேசமாக இருக்க வேண்டும் அல்லது முழு மாநிலமாக இருக்க வேண்டும் என தனது மனுவில் வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி லோகுர், அப்துல் நசீர், தீபக் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
 

Advertisement
Advertisement