This Article is From Jul 16, 2019

நான்கரை ஆண்டு காலத்தில் 23 பாலங்களை கட்டியுள்ளோம் : அரவிந்த் கெஜ்ரிவால்

205 கோடி மதிப்புள்ள பாலம் ரிங் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நான்கரை ஆண்டு காலத்தில் 23 பாலங்களை கட்டியுள்ளோம் : அரவிந்த் கெஜ்ரிவால்

மக்கள் எங்கள் வேலையை குறிப்பிட்டு பேசுகின்றனர் (File)

New Delhi:

இன்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் 2.85 கி.மீ நீளமுள்ள சிக்னல் இல்லாத புதிய ஆர்டிஆர் மேம்பாலத்தை  திறந்து வைத்தார். மேலும் பல திட்டங்கள் இந்திய தலைநகருக்கு வரவுள்ளதாக தெரிவித்தார். 

205 கோடி மதிப்புள்ள  பாலம் ரிங் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கு டெல்லி மற்றும் நொய்டா ஆகிய பகுதிகளிலிருந்து  ஏர்போர்ட்டை விரைவில் சென்றடைய முடியும். 

ஷீலா தீக்‌ஷித் 15 வருட ஆட்சிக்காலத்தில் 70 மேம்பாலங்களை கட்டினார்கள். எங்களுடைய நான்கரை  ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் 23 பாலங்களை கட்டியுள்ளோம். என்று அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டு பேசினார். 

நாங்கள் எங்கள் வேலைகளை செய்கிறோம். ஆனால் அதை விளம்பரமாக சொல்வதில்லை என்று கூறியிருந்தார். இப்போது மக்கள் எங்கள் வேலையை குறிப்பிட்டு பேசுகின்றனர் என்று கூறினார். 

வெற்று அரசியல் மட்டும் பேசாமல் எங்கள் வேலைகளை மட்டுமே நாங்கள் செய்துள்ளோம். டெல்லி அரசு கல்வி, சுகாதாரம் மற்றும் பிற துறைகளிலும் சிறப்பாக வேலை பார்த்துள்ளது. எங்களின் வேலை எங்களைப் பற்றி பேசும் என்று கூறினார். 

ஆம் ஆத்மி அரசு மிகப்பெரிய உள்கட்டமைப்பு பணிகளைச் செய்யவில்லை. மாறாக மக்களின் பயன்பாட்டுக்குத் தேவையான ரோடுகள், கழிவு நீர் வெளியேற்ற முறைகள், பல காலணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளோம். ஏழை எளிய மக்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்துள்ளோம். 

.