சர்வதேச அளவிளான பாடி பில்டரும் உடற்பயிற்சியாளர் ஹேமந்த் லம்பா
Rewari: டெல்லியில் ஜிம் உரிமையாளர் ஒருவர் தன் காதலியையும் தப்பி சென்றபோது ஓட்டுநரையும் சுட்டுகொன்றுள்ளார். ஜிம் உரிமையாளரை குஜராத்தில் காவல்துறை கைது செய்துள்ளது. காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட ஹேமந்த லம்பா கைது செய்யப்பட்டார்.
சர்வதேச அளவிளான பாடி பில்டரும் உடற்பயிற்சியாளருமான ஹேமந்த் லம்பா டிசம்பர் 7 ஆம் தேதி ஹரியானாவின் ரேவாரி மாவட்டத்தில் தன் காதலியை தலையில் 4 முறை சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.
காதலியின் உடலை ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் அப்புறப்படுத்தி விட்டு வாடகை வண்டியில் தப்பி சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கொலைக்கு பின் வண்டியில் பயணித்த ஹேமந்த் லம்பா அதன் ஓட்டுநர் தேவேந்திராவை துப்பாக்கியை காட்டி மிரட்டி ஜெய்ப்பூருக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். பின் அவரையும் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.
ஹேமந்த் லம்பா அந்த காரை குஜராத்தில் உள்ள வல்சாத் நகருக்கு சென்று காரை விற்க விரும்பினார். உள்ளூர் கார் வியாபாரி அல்பேஷுடன் தொடர்பு கொண்டார். வாகனத்தை விற்க அவசரப்படுவதைக் கண்டு சந்தேகப்பட்டு காரில் இருந்த தொலைபேசி எண்ணுக்கு அழைத்துள்ளார். வண்டி ஓட்டுநரின் மனைவி தொலைபேசியை எடுத்துள்ளார். உண்மையை அறிந்தபின் வியாபாரி காவல்துறையை தொடர்பு கொண்டார். பின்னர் குற்றம் சாட்டப்பட்ட ஹேமந்த் லம்பா கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட பெண் ராஜஸ்தானில் ஹனுமன்கர் நகரைச் சேர்ந்தவர். தன் தந்தையுடன் டெல்லியில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்ததாகவும் தெரிகிறது. இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.