This Article is From Dec 07, 2018

டெல்லியில் மோசமடையும் காற்று மாசு - பயன்தராத ரூ.25 கோடி அபராதம்!

கடந்த பத்து வருடங்களாக இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றது, போலீசார்க்கு இதை கவனிக்க நேரமில்லை

New Delhi:

உலகத்திலேயே காற்று மாசினால் மிகவும் பாதிக்கப்பட்ட நகரம் டெல்லியென தேசிய பசுமை தீர்பாயம் அறிவிக்கப்பட்ட பின்னரும் தீர்பாயம் அமைந்திருக்கும் வளாகத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் மேற்கு டெல்லியில் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டன.

தேசிய பசுமை தீர்பாயம் (என்.ஜி.டி) கடந்த திங்கள் அன்று பிளாஸ்டிக் குப்பைகள் அல்லது பொருட்களை எரித்தால் ரூபாய் 25 கோடி அபராதம் விதித்த நிலையில் மேற்கு டெல்லியில் பிளாஸ்டிக்கை எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

டெல்லியின் வானிலை, காற்று மாசுவின் நிலையை மிக மோசமாக்கியுள்ளது. மத்திய மாசுபாடு கட்டுபாடு வாரியத்தின் சார்பாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் காற்று மாசு சுமார் 355 புள்ளிகளுடன் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

NDTV சார்பாக நீல்வால் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் இதுபோன்ற தீ வைத்து குப்பைகளை எரிக்கும் சம்பவங்கள் வழக்கம்போல் தொடர்ந்து வருவதாக தெரியவந்தது. மேலும் அந்த குப்பைகளை சரியாக பிரிக்காமல் அப்படியே எரிப்பதால் கருப்பு புகை சூழ அந்த நகரம் காணப்படுகிறது.
‘ இங்கு என்.ஜி.டி யின் விதிகளை யாரும் மதிப்பதில்லை, 2013-ல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையையும் மீறி மக்கள் தெடர்ந்து பிளாஸ்டிக்கை பயன்படுத்திவருவதுதான் எதார்த்த உண்மை' என இந்த பொதுநல வழக்கை தொடர்ந்துள்ள மஹாவீர் சிங் கூறினார்.fppf4fog

மேலும் அவர் அங்குள்ள பிளாஸ்டிக் கிடங்கு உரிமையாளர்கள் பிளாஸ்டிக்கை தெடர்ந்து எரிப்பதும் அதன் விளைவை கொஞ்சம் கூட உணராமல் செயல்படுவதும் மக்களை மிகவும் பாதிப்பதாக கூறினார்.

காற்று மாசுபாடினால் ஏற்படும் நோய்களை தொடர்ந்து இதுபோன்ற அபாய செயல்களால் மாசுபாட்டின் அளவு அதிகரிக்கிறது.

‘ இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத நாள் இல்லை' என தீயணைப்பு வாகன ஓட்டுனர் ஒருவர் கூறிய நிலையில், அங்குள்ள பி.வி.சி மார்க்கெட்டில் தீ கட்டுப்பாடு அதிகாரி தீரிலோக் ஷர்மா கூறுகையில் ‘ கடந்த பத்து வருடங்களாக இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றது, போலீசார்க்கு இதை கவனிக்க நேரமில்லை' என கூறினார்.

ஹிரியானா மற்றும் பஞ்சாபில் உள்ள விவசாயிகள் இதுபோன்று குப்பைகளை எரித்ததாக சில நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியானது.

 
.