This Article is From Mar 18, 2019

ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு நாளை விசாரணை!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் நாளை அவசரமாக வழக்காக விசாரிக்கிறது.

ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு நாளை விசாரணை!

அதிமுகவின் பிரிவினைகளுக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முதல்வர் பழனிசாமி ஒன்றாக இணைந்தனர். அதன்பின்னர் அதிமுகவின் கொள்கை விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது.

இது சட்ட விதிகளுக்கு புறம்பானது என்றும் வேட்பாளர்களின் வேட்பு மனுவில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். கையெழுத்திட தடை விதிக்க கோரி முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை மார்ச் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். ஆனால், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளதால், வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரி கே.சி.பழனிசாமி தரப்பில் கடந்த 13ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று கொண்ட நீதிபதிகள், நாளை அவசர வழக்காக விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் நாளையே தினமே இந்த வழக்கு தொடர்பாக முக்கியமான உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

.