Read in English বাংলায় পড়ুন
This Article is From Nov 28, 2018

''1984- கலவர வழக்கில் தொடர்புடைய 88 பேரும் குற்றவாளிகள்''- டெல்லி உயர்நீதிமன்றம்

1984-ல் சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் கலவரம் நடந்தது. இதில் தொடர்புடைய 88 பேரும் குற்றவாளிகள் என டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.

Advertisement
இந்தியா Posted by

இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து கலவரம் வெடித்தது

New Delhi:

சீக்கியர்களுக்கு எதிராக கடந்த 1984-ல் நடந்த கலவரத்தில் தொடர்புடைய 88 பேரும் குற்றவாளிகள் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984 நவம்பர் மாதத்தின்போது தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர்களை சுட்டவர்கள் சீக்கிய வீரர்கள் என்பதால் நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் வெடித்தது. இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக அமிர்தசரஸ் பொற்கோவிலில் ராணுவ நடவடிக்கையை இந்திரா காந்தி மேற்கொண்டார். இதற்கு எதிர்வினையாக படுகொலை நடத்தப்பட்டது.

கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் 95 பேர் கொல்லப்பட்டதாகவும், 100-க்கும் அதிகமான வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டது.

இதுதொடர்பாக 100-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். வன்முறை நடத்தியது, தீயிட்டு கொளுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டது. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அவர்களில் சிலர் உயிரிழந்து விட்டனர். கடைசியாக 88 பேர் தற்போது இருக்கின்றனர். அவர்கள் குற்றவாளிகள் என டெல்லி விசாரணை நீதிமன்றம் கடந்த 1996-ல் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Advertisement

2015-ல் கலவரம் தொடர்பான சுமார் 220 வழக்குகளை விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்தது. இந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய 88 பேரும் குற்றவாளிகள் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மற்ற சில வழக்குகளில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சாஜன் குமார் மற்றும் ஜெக்தீஷ் டைட்லர் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement