This Article is From Sep 18, 2018

சசிகலா புஷ்பா குறித்து இணைய அவதூறுகளை நீக்க வேண்டும் என உத்தரவு!

‘நீதிமன்ற வழிகாட்டுதல்படி அவதூறான யுஆர்எல் லிங்குகளை நீக்கியுள்ளோம்’ என்று வாதிட்டப்பட்டது

சசிகலா புஷ்பா குறித்து இணைய அவதூறுகளை நீக்க வேண்டும் என உத்தரவு!

2016 ஆம் ஆண்டு அதிமுக-விலிருந்து நீக்கப்பட்டார் சசிகலா புஷ்பா

New Delhi:

அதிமுக-விலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.பி சசிகலா புஷ்பா குறித்து இணையதளத்தில் இருக்கும் அவதூறான கருத்துகளை நீக்கப்பட வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தளங்களில் அவதூறான கருத்துகள் பரப்பப்படுகின்றன என்று சசிகலா புஷ்பா தொடர்ந்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரித்த டெல்லி நீதிமன்றம், உடனடியாக அவதூறாக இருக்கும் பதிவுகளை நீக்குமாறு ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்நிறுவனங்களிடம், இந்த விவகாரம் குறித்து பதிலளிக்குமாறு கூறி வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்த வழக்கு குறித்து மனு தாக்கல் செய்த சசிகலா புஷ்பா, ’என்னைப் பற்றியான அவதூறான கருத்துகளை பரப்பும் வகையில் இருக்கும் இணையதள யுஆர்எல் லிங்குகளை நீதிமன்றத்திடம் முன்னரே சமர்பித்தேன். அது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்த பின்னரும், எந்தவித முன்னெடுப்பும் எடுக்கப்படவில்லை’ என்றார்.

இதற்கு இணையதள நிறுவனங்கள் சார்பில், ‘நீதிமன்ற வழிகாட்டுதல்படி அவதூறான யுஆர்எல் லிங்குகளை நீக்கியுள்ளோம்’ என்று வாதிட்டப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 2016 ஆம் ஆண்டு, நாடாளுமன்றத்திடம் புகார் அளித்த சசிகலா புஷ்பா, ‘அதிமுக-வின் தலைவர் ஜெயலலிதா என்னை கண்ணத்தில் அரைந்துள்ளார். எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. எனக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்’ என்று புகார் அளித்தார். அவர் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

.