This Article is From Feb 28, 2020

டெல்லி வன்முறை வழக்கினை விசாரித்த நீதிபதி நள்ளிரவில் பணி இட மாற்றம்

கடந்த பிப்ரவரி 12 அன்று உச்ச நீதிமன்ற கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட இந்த அறிவிப்பினை தற்போது புதன் கிழமை இரவு வெளியிடப்பட்டிருக்கிறது.

டெல்லி வன்முறை வழக்கினை விசாரித்த நீதிபதி நள்ளிரவில் பணி இட மாற்றம்

இந்த இடமாற்றத்தை டெல்லி உயர் நீதிமன்ற சங்கம் கடந்த வாரம் கண்டித்துள்ளது

New Delhi:

டெல்லி வன்முறை வழக்கினை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் மூன்றாவது உயர் நீதிபதியான முரளிதர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதாகப் புதன் கிழமை இரவு அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

தேசியத் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற வன்முறையில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும், 200-க்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கிறார்கள். இந்த நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியான முரளிதர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரி 12 அன்று உச்ச நீதிமன்ற கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட இந்த அறிவிப்பினை தற்போது புதன் கிழமை இரவு வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்திய அரசியலமைப்பின் 222வது பிரிவின் (1) வது பிரிவினால் வழங்கப்பட்ட அதிகாரத்தின் படி இந்திய ஜனாதிபதி மற்றும் இந்தியாவின் தலைமை நீதிபதி கலந்தாலோசித்து, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பினை ஏற்கும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசாங்க அறிவிப்பு குறிப்பிட்டிருக்கின்றது.

டெல்லி பார் அசோசியேஷன் கடந்த வாரம் இந்த இடமாற்றத்தினை கண்டித்து, உச்ச நீதிமன்ற கொலீஜியத்தினை மறு நினைவுகூருமாறு கோரியிருந்தது.

முன்னதாக புதன்கிழமை நீதிபதி முரளிதர், "1984 போன்ற மற்றொரு நிகழ்வை இந்த நாட்டில் நடக்க நாங்கள் அனுமதிக்க முடியாது" என்று கூறியதோடு, தேசிய தலைநகரின் சில பகுதிகளைத் தாக்கும் இடைவிடாத வன்முறையை எதிர்த்துப் போராட அரசாங்கத்தை - மையத்திலும் டெல்லியிலும் ஒன்றிணைக்குமாறு கேட்டுக் கொண்டோம். என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கலவரத்தினை தூண்டியவர்கள் மற்றும் பங்கெடுத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற வழக்கு விசாரணை ஒன்றின்போது,  நான்கு பா.ஜ.க தலைவர்களின் (கபில் மிஸ்ராஅனுராக் தாக்கூர்அபய் வர்மா மற்றும் பர்வேஷ் வர்மா) வெறுக்கத்தக்க உரைகளின் வீடியோக்கள் மீதான விசாரணையைத் தொடர்ந்து இந்தக் கருத்தினை அவர் குறிப்பிட்டிருந்தார். 

.