This Article is From Nov 28, 2019

தீராத சண்டை : திருமணமான 8 மாதத்தில் மனைவியை சுட்டுக் கொன்ற நபர் கைது

நான்சிக்கும் சாஹில் சோப்ராவுக்கும் மார்ச் 27, 2019 அன்று திருமணம் முடிந்துள்ளது. வரதட்சணைக்காக மாமியார் சித்ரவதை செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

தீராத சண்டை :  திருமணமான 8 மாதத்தில் மனைவியை சுட்டுக் கொன்ற நபர் கைது

அடிப்படையில் 3 வது குற்றவாளியும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவிக்கின்றனர் (Representational)

New Delhi:

வரதட்சணைக்காக மனைவி கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சாஹில் சோப்ரா (21) மற்றும் அவரது உதவியாளர் சுபம் (24) என்பவரின் உதவியுடன் தன் மனைவியை சுட்டுக் கொன்றுள்ளார். பின் உடலை ஹரியானா மாநிலம் பானிபட் அருகே புதைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் சாஹில் சோப்ராவும் அவரது உதவியாளர் சுபம்  கைது செய்யப்பட்டுள்ளனர். சுபாமின் உறவினரான படேல் கொலைக்கு உடந்தையாக உள்ளவர் என்ற அடிப்படையில் 3 வது குற்றவாளியும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவிக்கின்றனர். 

பலியான நான்சி (20) நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் துறையில் பணிபுரிந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.  செவ்வாயன்று நான்சியின் தந்தை காவல்துறையை அணுகி நவம்பர் 11 முதல் தனது மகளின் தொலைபேசி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டதாகவும், அவருக்கு ஏதேனும் ஆகியிருக்கலாம் என்ற பயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

நான்சிக்கும் சாஹில் சோப்ராவுக்கும் மார்ச் 27, 2019 அன்று திருமணம் முடிந்துள்ளது. வரதட்சணைக்காக மாமியார் சித்ரவதை செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாராணை தொடங்கப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

குற்றவாளியிடம் விசாரணை செய்த போது மனைவியுடன் தொடர்ந்து சண்டை ஏற்பட்டு வந்ததாகவும் அதனால் ஆத்திரமடைந்து சுட்டுக் கொன்றதாகவும் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட குற்றவாளிகள் இரண்டு நாட்கள் காவல்துறையின் காவலில் வைத்திருக்க உத்திரவிடப்பட்டுள்ளது. 

.