ஹைலைட்ஸ்
- டெல்லியில் உள்ள கேசவ் புரம் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது
- தம்பதியின் மாமியார் இன்று அவர்கள் வீட்டுக்கு வந்துள்ளார்
- சம்பந்தப்பட்ட நபர் தப்பியோட்டம்
New Delhi:
புதுடெல்லி: டெல்லியில் உள்ள கேசவ் புரம் பகுதியில் விவாகரத்து கோரிய வழக்கில் 25 வயதான ஒருவர் தனது மாமியாரைக் கொன்றதாகவும், அவரது கர்ப்பிணி மனைவியை தாக்கியதாகவும் போலிசார் கூறினர்.
குற்றம் சாட்டப்பட்ட அஃப்ரோஸ் ,மனைவியிடம் விவாகரத்துக்கு கேட்டு தொடர்ந்து தொல்லைக் கொடுத்து வந்ததாகவும், ஆனால் அவர் மனைவி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லையென்றும் அவர்கள் கூறினர்.
மேலும் அவரது மாமியார் கஸிப்பூரிலிருந்து(Gazhipur) இன்று அவர்களை பார்க்க வந்த போது இந்த தம்பதியினர் மீண்டும் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டதாக கூறினர்.
கர்பமாகயிருக்கும் அவரது மனைவியை விவாகரத்து செய்ய முயற்சிப்பதற்காக அஃப்ரோஸை திட்டியதற்கு பின்னர் மாமியார் தாக்கப்பட்டார். அவர் மனைவி அவரை தடுக்க முயற்சித்தப்போது அவரையும் தாக்கினார். என்று அவர்கள் கூறினர்.
மேலும் காயமடைந்த பெண் மற்றும் அவரது மகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்று கூறினர்.
அஃப்ரோஸ் அந்த இடத்தைவிட்டு தப்பி ஓடினார். அவரை போலிசார் தேடிவருகின்றனர்.