This Article is From Jun 26, 2020

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டார் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர்! விரைவில் டிஸ்சார்ஜ்

நிலைமை மோசம் அடைந்ததால், கூடுதல் சிகிச்சைக்காக அவரை மேக்ஸ் மருத்துவமனையில் அதிகாரிகள் அனுமதித்தனர். அங்கு  அவருக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.  இதன் தொடர்ச்சியாக அவருக்கு பிளாஸ்மா சிகிச்சையை  மருத்துவர்கள் மேற்கொண்டார்கள். 

Advertisement
இந்தியா Posted by

அமைச்சர் சத்யேந்திரா ஜெயினின் உடல்நிலையை  அரசு  மற்றும் தனியார் சிறப்பு மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

Highlights

  • டெல்லி சுகாதார அமைச்சருக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது
  • மருத்துவமனையில் அமைச்சருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது
  • கொரோனா பரிசோதனை முடிவுகள் நெகடிவாக வந்துள்ளன
New Delhi:

கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டு வந்த டெல்லி சுகாதாரத்துறை அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான சத்யேந்திரா ஜெயின் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார். விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. இது நல்ல பலன் அளித்ததால் அவர் குணம் அடைந்துள்ளார். இதுதொடர்பான விவரங்களை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அமைச்சருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது முடிவுகள் நெகடிவாக வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

கடந்த வாரம்தான் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன்பின்னர் அவர் ராஜிவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

நிலைமை மோசம் அடைந்ததால், கூடுதல் சிகிச்சைக்காக அவரை மேக்ஸ் மருத்துவமனையில் அதிகாரிகள் அனுமதித்தனர். அங்கு  அவருக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.  இதன் தொடர்ச்சியாக அவருக்கு பிளாஸ்மா சிகிச்சையை  மருத்துவர்கள் மேற்கொண்டார்கள். 

Advertisement

அமைச்சர் சத்யேந்திரா ஜெயினின் உடல்நிலையை  அரசு  மற்றும் தனியார் சிறப்பு மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.  இந்த  நிலையில் அவர் கொரோனா பாதிப்பிலிருந்து  மீண்டுள்ளார்.

Advertisement