Read in English
This Article is From Oct 31, 2018

“காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லியில் சுகாதார வாரம்” - சுற்றுச் சூழல் அமைச்சகம் அறிவிப்பு

மத்திய சுற்றுச் சூழல் துறை செயலர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது

Advertisement
Delhi

விழிப்புணர்வு நடவடிக்கையை மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஹர்ஷ வர்தன் தொடங்கி வைக்கவுள்ளார்

New Delhi:

டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நவம்பர் 1 முதல் 5-ம் தேதி வரை சுகாதார வாரம் கடைபிடிக்கப்படும் என்று சுற்றுச் சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.

டெல்லி அரசுடன் இணைந்து நடத்தப்படும் இந்த விழிப்புணர்வு நடவடிக்கை டெல்லி மற்றும் 4 முக்கிய நகரங்களில் நடத்தப்படவுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக 52 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விழிப்புணர்வு நடவடிக்கையை மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஹர்ஷ வர்தன் தொடங்கி வைக்கவுள்ளார். மத்திய சுற்றுச் சூழல் அமைச்சக செயலர் சி.கே. மிஷ்ரா தலைமையில் நேற்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியைப் பொறுத்தவரையில் பசுமை பட்டாசுகளை விற்பனை செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதேபோன்று பட்டாசுகளை இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே வெடிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement