This Article is From May 16, 2019

தனியாக சென்ற பெண்ணை தாக்கி செயினை பறித்த கொள்ளையர்கள்!! #Video

டெல்லியில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. தாக்குதலுக்கு ஆளானவர் மனித வளத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

தனியாக சென்ற பெண்ணை தாக்கி செயினை பறித்த கொள்ளையர்கள்!! #Video

டெல்லியின் இந்திரபுரி பகுதியில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

New Delhi:

டெல்லியில் தனியாக சென்ற பெண் ஒருவரைத் தாக்கி அவரிடம்  கொள்ளையர்கள் செயினை பறித்துச் சென்றுள்ளனர். இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகி வைரலாகி வருகிறது. 

சிசிடிவி காட்சியில் 2 பேர் பைக்கில் வந்தவாறே தனியாக செல்லும் பெண்ணை நோட்டமிடுகின்றனர். நேரம் பார்த்து அவர்களில் ஒருவர் பெண்ணைத் தாக்கி கழுத்தில் இருக்கும் செயினை பறிக்க முயல்கிறார். மற்ற நபர் பைக்கில் சுற்றியவாறே, யாரேனும் வருகிறார்களா என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறார். 

30 வினாடிகளில் செயின் பறிக்கப்பட்டவுடன், செயினை பறித்த கொள்ளையர் ஓடிச்சென்று பைக்கில் ஏறிக் கொள்கிறார். பின்னர் இருவரும் பைக்கில் பறக்கின்றனர். இந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. 

தாக்குதலுக்கு ஆளானவரின் பெயர் ரோசா என்பது அவர், தனியார் நிறுவனம் ஒன்றில் மனித வளத்துறை அதிகாரியாக பணியாற்றுகிறார் என்றும் தெரியவந்துள்ளது. 

மே 13-ம்தேதி டெல்லியில் இந்திரபுரி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. 
 

(With inputs from ANI)

.