Read in English
This Article is From Jul 16, 2019

ஜெய்ஸ்-இ-முகம்மது இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி ஶ்ரீநகரில் கைது

கைது செய்யப்படும் போது 3 கிலோ எடையுள்ள வெடிக்கும் பொருட்கள், 4 டெட்டனேட்டர்கள், டைமர்கள், ஆறு கையெறி குண்டுகள், ஏ.30 போர் பிஸ்டல், ரூ. 50,000 மதிப்பில் கள்ள நோட்டும். 10,000 அமெரிக்க டாலரும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Advertisement
இந்தியா Edited by

கைது செய்யப்பட்ட நபர் குறித்து துப்பு கொடுப்பவருக்கு ரூ.2 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது

New Delhi:

ஜெய்ஸ் -இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர் ஶ்ரீநகரில் டெல்லி காவல்துறை சிறப்பு குழுவினர் ஶ்ரீநகரில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர் குறித்து துப்பு கொடுப்பவருக்கு ரூ.2 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவரது பெயர் பஷீர் அகமது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லியின் தீன் தயால் உபாதயாய் மார்க் என்ற பகுதியில் 2007 ஆம் ஆண்டில் டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவினரால் ஷாஹித் கபூர், ஃபயாஸ் அகமது லோன், அப்துல் மஜீத் பாபா ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். 