This Article is From Jan 18, 2020

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் டெல்லி போலீஸ்க்கு அதிகாரம் -ஆளுநர் அறிவிப்பு

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவு (NRC) ஆகியவற்றிற்கு எதிராக தேசிய தலைநகரம் பல எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் டெல்லி போலீஸ்க்கு அதிகாரம் -ஆளுநர் அறிவிப்பு

ஜனவரி 19 முதல் ஏப்ரல் 18 வரை டெல்லி மாநிலத்தை பாதுக்காக்க இதை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்

New Delhi:

டெல்லியின் ஆளுநர் அனில் பைஜால் டெல்லி போலீஸ் கமிஷனருக்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் (NSA) சட்டத்தின் கீழ் அதிகாரத்தை வழங்கியுள்ளார்.

இதன் படி தனிநபர் ஒருவர் தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தல் என்று அதிகாரிகள் கருதினால், அந்நபரை பல மாதங்கள் தடுத்து வைக்க இச்சட்டம் அனுமதிக்கிறது. 

தேசிய பாதுகாப்புச் சட்டம், 1980 பிரிவு 2இன் கீழ் துணைபிரிவு 3 ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும். ஜனவரி 19 முதல் ஏப்ரல் 18 வரை டெல்லி மாநிலத்தை பாதுக்காக்க இதை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லி போலீஸ் கமிஷ்னர் மேற்கண்ட சட்டத்தின் 3வது பிரிவின் துணைப்பிரிவு (2)இன் கீழ் அதிகாரத்தின் யாரை வேண்டுமென்றாலும் தடுத்து வைக்க அதிகாரத்தை பயன் படுத்தலாம்.

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவு (என்.ஆர்.சி) ஆகியவற்றிற்கு எதிராக தேசிய தலைநகரம் பல எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. 

இருப்பினும், இது ஒவ்வொரு காலாண்டிலும் வழங்கப்படும் ஒரு வழக்கமான உத்தரவு என்றும் தற்போதைய நிலைமைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. 

.