New Delhi: ஆம் ஆத்மி கட்சி அதிகாரிகளை சிறைக்கு அனுப்பும் முயற்சியில் டில்லி காவல் துறையினர் ஈடுபட்டுள்ளதாக டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார்
ஆம் ஆத்மி கட்சி அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும் என்று டில்லி காவல் துறையினருக்கு சிறப்பு காவல் துறை கண்காணிப்பாளர் அழைப்பு விடுத்திருந்தார். இது குறித்து வெளியான செய்தி கட்டுரையை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்களை சிறைக்கு அனுப்ப டில்லி காவல் துறையினர் திட்டமிடுகின்றனர். இதற்கு பதிலாக, நாட்டில் உள்ள பெண்கள் பாதுகாப்பிற்காகவும், பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் இயங்கும் சட்ட திருத்தங்களை சரி செய்யவும் நேரத்தை செலவிட வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார். மேலும், சட்டத்திற்கு மாறாக இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.