বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Nov 06, 2019

#LawyersVsDelhiPolice - பதற்றத்தில் தலைநகரம்… சாட்டையை சுழற்றிய டெல்லி உயர் நீதிமன்றம்!

Delhi Police vs lawyers: டெல்லியின் போலீஸுக்கு அரியானா, பிகார் மற்றும் பல்வேறு மாநில போலீஸார், தங்களது ஆதரவைக் கொடுத்து வருகின்றனர். 

Advertisement
இந்தியா Edited by

Delhi Police vs lawyers: மத்திய உள்துறை அமைச்சகமும், நிலைமை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு கேட்டுள்ளது. 

New Delhi:

Delhi Police vs lawyers: தலைநகர் டெல்லியில் (Delhi) உள்ள வழக்கறிஞர்கள் மற்றும் காவல் துறையினருக்கு இடையில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட மோதல் இன்று கட்டுக்கடங்காத நிலையை அடைந்துள்ளது. 

கடந்த சனிக்கிழமை, டெல்லியில் உள்ள திஸ் ஹசாரி காம்ப்ளக்ஸில் வாகனம் நிறுத்தும் விவகாரத்தில் சில போலீஸாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் 20 போலீஸாருக்கும் சில வழக்கறிஞர்களுக்கும் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் நடந்ததில் இருந்து கொதிப்பில் இருக்கும் போலீஸ் தரப்பு, தங்களுக்கு நீதி வேண்டும் என்று சொல்லி வருகிறது. 

இன்று உச்சக்கட்டமாக டெல்லியில் இருக்கும் போலீஸ் தலைமையகத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான காவல் துறையினர், தங்களுக்கு பாதுகாப்பும் நீதியும் வேண்டும் எனக் கோரி வரலாறு காணாத போராட்டத்தில் குதித்தனர். இதனால் தலைநகரமே ஸ்தம்பித்துள்ளதாக தெரிகிறது. 

இந்த சம்பத்தைத் தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்றம், தானாக முன் வந்து, இந்திய பார் கவுன்சில் மற்றும் டெல்லி பார் கவுன்சில்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜல், தனது இல்லத்தில் அரசு அதிகாரிகளின் அவசர சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார். மத்திய உள்துறை அமைச்சகமும், நிலைமை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு கேட்டுள்ளது. 

Advertisement

டெல்லியின் போலீஸுக்கு அரியானா, பிகார் மற்றும் பல்வேறு மாநில போலீஸார், தங்களது ஆதரவைக் கொடுத்து வருகின்றனர். 

Advertisement