हिंदी में पढ़ें Read in English
This Article is From Aug 20, 2020

டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளப்பெருக்கு, போக்குவரத்து நெரிசல்!

ஒட்டுமொத்தமாக, இதுவரை 457.8 மிமீ மழை பதிவாகியுள்ளது, இது ஜூன் 1ம் தேதி பருவமழைக்காலம் தொடங்கிய போது 433.2 மிமீ அளவாக இருந்ததை விட ஆறு சதவீதம் அதிகமாகும்.

Advertisement
இந்தியா
New Delhi:

தலைநகர் டெல்லியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பெய்த கனமழையால், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், நகரத்திலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை மட்டும் 46 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது சஃப்தர்ஜங் ஆய்வகத்தின்படி, நகரத்திற்கான பிரதிநிதித்துவ புள்ளி விவரங்களை வழங்குகிறது. அதன்படி 70.9 மி.மீ அளவு மழை பெய்துள்ளது. இது சராசரி மழை அளவை விட ஆறு மடங்கு அதிகமாகும் என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும், ஆக.19ம் தேதி காலை 8.30 மணி முதல் ஆக.20ம் தேதி காலை 8.30 மணி வரை சராசரியாக 11.3 மி.மீ மழை பதிவாகும். 

ஒரே இரவில் மழை வெப்பநிலையை 27 டிகிரிக்குக் குறைத்த போதிலும், குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்போது தலைநகரின் குடிமை உள்கட்டமைப்பின் மோசமான நிலையின் யதார்த்தத்தை விரைவில் உணர்ந்தனர்.

Advertisement

இதுதொடர்பாக டெல்லி போக்குவரத்து காவல்துறை, சாலை பாதிப்படைந்துள்ள பகுதிகள் குறித்த விவரத்தையும் தெரிவித்து வந்துள்ளது. 

ஒட்டுமொத்தமாக, இதுவரை 457.8 மிமீ மழை பதிவாகியுள்ளது, இது ஜூன் 1ம் தேதி பருவமழைக்காலம் தொடங்கிய போது 433.2 மிமீ அளவாக இருந்ததை விட ஆறு சதவீதம் அதிகமாகும்.

With inputs from agencies

Advertisement
Advertisement