Read in English
This Article is From Sep 10, 2020

கடந்த 24 மணி நேரத்தில் 4,000க்கும் அதிகமான கொரோனா பாதிப்பை பதிவு செய்தது டெல்லி!!

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 73,890 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
இந்தியா

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு டெல்லியும் ஒரு முக்கிய பங்காக உள்ளது.

New Delhi:

தேசிய தலைநகர் டெல்லி கடந்த 24 மணி நேர்த்தில் அதிகபட்சமாக 4,000க்கும் அதிகமான கொரோனா நோயாளிகளை புதியதாக பதிவு செய்துள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அளவாகும்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 44 லட்சத்தினை நெருங்கிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில் தேசிய தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தினை எட்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 4,618 பேர் கொரோனா தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,01,174 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக கடந்த ஜூன் 23 அன்று டெல்லி அதிகபட்சமாக 3,947 புதிய கொரோனா தொற்று எண்ணிக்கையை பதிவு செய்திருந்தது.

இந்த ஒரு நாள் அதிக எண்ணிக்கையானது நீண்ட கால எதிர்பார்ப்புக்கு பின்னர் இயக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவையைத் தொடர்ந்து பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு டெல்லியும் ஒரு முக்கிய பங்காக உள்ளது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 73,890 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement