கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்குவின் பாதிப்பு சற்று குறைந்துள்ளது
New Delhi: இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடந்த வாரம் டெங்கு, மலேரியா போன்ற நோய்களின் தாக்கம் அதிகமாகியுள்ள நிலையில் அதன் அதிகாரப் பூர்வமான அறிக்கை வெளியானது.
அந்த அறிக்கையில் இந்த வாரம் டெங்குவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 271 நபர்கள் ஆக இருப்பதாக தகவல் வெளியானது.
இம்மாதம் 18 வரை கணக்கேடுப்பு எடுத்ததில் டெல்லியில் மட்டும் 551 நபர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இறுதியாக வந்த அறிக்கையின் படி கொசுக்களால் பரவும் இந்த வகை காய்ச்சலால் இதுவரை 2,146 நபர்கள் சிகிச்சைக்கு உள்ளாக்கபட்டதாக தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட 4,375 நபர்களை விட இந்த ஆண்டு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்து உள்ளது .
இதுவரை டெங்குவால் ஒருவர் மட்டும் மரணமடைந்த நிலையில், வஸிபாத்தை (wazibad) சேர்ந்த 13 வயது இளம் பெண் ஒருவர் கடந்த செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி பலியாகியுள்ளதாக தகவல் வெளியானது.
11,800 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில் 60 நபர்கள் டெங்குவால் மரணமடைந்தனர். டெல்லியில் டெங்கு காய்ச்சல் மிகவும் பாதிக்கப்பட்ட வருடமாக 2015 கருதப்பட்டது.
இந்நிலையில் மலேரியாவால் தற்போது 12 நபர்கள் பாதிக்கப்பட்டதாக அரசுதரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு 560 நபர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 450 ஆக குறைந்துள்ளது.
மேலும் கடந்த வாரம் 9 பேர் சிக்கன்குனியாவால் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் 17 நபர்கள் நவம்பர் மாதம் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், கடந்த அக்டோபர் மாதத்தில் இறந்த 54 நபர்களுக்கு இந்த மாதம் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறினார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)