கடந்த 1901 ஆம் ஆண்டுக்குப் பிறகு டெல்லியில் வெப்பநிலை மிகவும் குறைந்துள்ளது. (Representational)
New Delhi: டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு வெப்ப நிலை 3.6 டிகிரி செல்ஸியஸாக குறைந்துள்ளது. எலும்பைத்துளைக்கும் குளிரினால் தேசிய தலைநகரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளத். வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் பனிமூட்டமாகவே காட்சியளிக்கிறது. டிசம்பர் 14 முதல் 1901 ஆம் ஆண்டு முதல் காணாத குளிரினை கண்டு வருகிறது.
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதாவது கடந்த 1901 ஆம் ஆண்டுக்குப் பிறகு டெல்லியில் வெப்பநிலை மிகவும் குறைந்துள்ளது. குறிப்பாக டெல்லியில் 3.6 டிகிரி செல்சியஸாக உள்ளது. காலை 6.10 மணியளவில் குறைந்த பட்ச வெப்பநிலை 2.4 டிகிரியாக உள்ளது என்று செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.
அடர்த்தியான மூடுபனி காரணமாக டெல்லியின் சில பகுதிகளில் சாலைகளைக்கூட காண முடியவில்லை. ரயில், சாலை மற்றும் விமானபோக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கு வரவேண்டிய 4 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும் 24 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
குஃப்ரி, மணாலி, சோலன், பூந்தர், சுந்தர்நகர் மற்றும் கல்பா ஆகியவை இமாச்சல பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை பூஜ்ஜிய வெப்பநிலையை விடக் குறைந்துவிட்டன, மேலும் கீலாங் பகுதி மிகக் குறைந்த வெப்பநிலையை மைனஸ் 15 டிகிரி செல்சியஸில் பதிவு செய்தது.
அடுத்த வாரம் டெல்லி உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளுக்கு ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.