Read in English
This Article is From Dec 05, 2019

டெல்லி குடிசைப் பகுதியை வண்ணமயமாக்கிய கலைஞர்கள் : கலக்கல் புகைப்படங்கள்

“பொது சமுதாயத்தால் மறந்துபோன உள்ளூர்வாசிகளுக்கு சாதகமான மாற்றத்தையும் நம்பிக்கையையும் கொண்டுவருவதே இதன் நோக்கம்” என்று டெல்லி ஆர்ட் ஸ்ட்ரீட்டின் நிறுவனர் யோகேஷ் சைனி கூறியுள்ளார்.

Advertisement
விசித்திரம் Edited by

நூறு கட்டமைப்புகளில் கரடுமுரடான முகப்புகளையெல்லாம் மறுவடிவமைத்துள்ளனர் (AFP)

டெல்லியின் குடிசைப் பகுதி வண்ணமயமாகியுள்ளது. கலை ஆர்வமிக்க சில கலைஞர்கள் பொது மக்கள் யாரும் பார்வையிட விரும்பாத குடிசைப் பகுதிக்கு வண்ணம் தீட்டி வண்ணமயமாக்கியுள்ளனர். 

ரகுபீர் நகர் 20 மில்லியன் மக்கள் வாழும் பெருநகரத்தில் உள்ள ஒரு குடிசைப் பகுதி.  அடிப்படை வசதியான தங்குமிடம் கூட இல்லாத மக்கள் அனேகம்பேர் உள்ளனர். 

ஒரு மாதத்திற்குள் 15 முதல் 20 தன்னார்வலர்கள் மதம் மற்றும் அன்றாட வாழ்க்கையை சித்தரிக்கும் பிரமாண்டமான சுவரோவியங்களுடன் வானவில் வண்ணங்களில் கிட்டத்தட்ட நூறு கட்டமைப்புகளில் கரடுமுரடான முகப்புகளையெல்லாம் மறுவடிவமைத்துள்ளனர். 

Advertisement

“பொது சமுதாயத்தால் மறந்துபோன உள்ளூர்வாசிகளுக்கு சாதகமான மாற்றத்தையும் நம்பிக்கையையும் கொண்டுவருவதே இதன் நோக்கம்” என்று டெல்லி ஆர்ட் ஸ்ட்ரீட்டின் நிறுவனர் யோகேஷ் சைனி கூறியுள்ளார். 

Advertisement

உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோளின் பேரில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. அழுக்கு, துர்நாற்றம் மட்டுமே இருக்கும் என்று நம்பப்படுகிற குடிசைப் பகுதியில் அழகும் கலையும் இருக்கும் என்பதை வெளிப்படுத்தவே இந்த முயற்சி செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். 

Advertisement