हिंदी में पढ़ें Read in English
This Article is From Jul 19, 2019

எம்.எல்.ஏவின் மகன் ஸ்டிக்கர் விவகாரம் : அவதூறு வழக்குக்கான நோட்டிஸ் அனுப்பிய சபாநாயகர்

ஒரு வெள்ளை நிற டஸ்டர் காரில் “எம்.எல்.ஏவின் மகன்” என்ற ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது. அது சபாநாயகரின் மகனின் கார் என்று கூறியிருந்தார்.

Advertisement
இந்தியா Edited by

ராம் நிவாஸ் கோயலின் வழக்கறிஞர் மஞ்சிந்தர் சிங் சிர்சாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்

Delhi:


டெல்லி சட்டமன்ற சபாநாயாகர் ராம் நிவாஸ் கோயல் வியாழக்கிழமை ஷிரோமணி அகாலிதல் சட்டமன்ற உறுப்பினர் மஞ்சிந்தர் சிங் சிர்சாவுக்கு அவதூறு வழக்கிற்கான நோட்டீஸை அனுப்பியுள்ளார்.

அகாலிதல் சட்டமன்ற உறுப்பினர் ஜூலை 15 ஆம் தேதி ஒரு வெள்ளை நிற டஸ்டர் காரில் “எம்.எல்.ஏவின் மகன்” என்ற ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது. அது சபாநாயகரின் மகனின் கார் என்று கூறியிருந்தார்.

மஞ்சிந்தர் சிங் சிர்சாவின் கூற்றை நிராகரித்த சபாநாயகர் ஏழு நாட்களுக்குள் எழுத்துப்பூர்வ மன்னிப்பு கேட்கவேண்டும் என கோரினார். அவர் அவ்வாறு செய்யவிட்டால் அவதூறு வழக்குத் தொடுக்கப்போவதாக கூறியுள்ளார்.

ராம் நிவாஸ் கோயலின் வழக்கறிஞர் மஞ்சிந்தர் சிங் சிர்சாவுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் “ அந்தகார் எனது தரப்பினர் மகனுக்கு சொந்தமானது அல்ல. தவறான மற்றும் அவதூற குற்றச்சாட்டுகள் எனது தரப்பினரின் நற்பெயருக்கு கேடு விளைவித்தன” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Advertisement
Advertisement