Delhi COVID-19 Cases: டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டதட்ட 100ஐ நெருங்குகிறது.
ஹைலைட்ஸ்
- மருத்துவருக்கு கொரோனா: டெல்லி அரசு மருத்துவமனை மூடல்!
- இங்கிலாந்தில் இருந்து திரும்பிய உறவினர்கள் மூலம் மருத்துவருக்கு கொரோனா
- டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
New Delhi: டெல்லியில் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அரசு மருத்துவமனை ஒன்று மூடப்பட்டுள்ளது. அந்த மருத்துவர் டெல்லி புற்றுநோய் சிகிச்சை மையத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து, அந்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலுவலகங்கள், பரிசோதனை மையங்கள், வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் இடம் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது, தொடர்ந்து, கிருமிநாசினிகள் மூலம் அந்த இடங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்திலிருந்து திரும்பிய உறவினர்கள் மூலம் அந்த மருத்துவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என டெல்லி புற்றுநோய் சிகிச்சை மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, அந்த மருத்துவருடன் தொடர்பிலிருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அந்த மருத்துவரின் சகோதரரும், அவரது மனைவியும் இங்கிலாந்திலிருந்து திரும்பியுள்ளனர். அவர்களிடம் இருந்து இவருக்கும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவமனை நிர்வாகி ஷெர்வால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டதட்ட 100ஐ நெருங்குகிறது.
இதனிடையே, நேற்றைய தினம் டெல்லி மெஹல்லா மருத்துவமனையில் உள்ள மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சவுதி அரேபியாவிலிருந்து திரும்பிய நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்த போது, அவருக்கும் பரவியதாக தெரிகிறது.