டெல்லி : மாநகராட்சி அதிகாரங்களுக்கு உரிமை கொண்டாடும் ஆளுநர், நகரில் தொடர்ந்து குவிந்து வரும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லியில் அதிக அளவிலான குப்பைகள் குவிந்திருப்பது குறித்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மதன் பி லோகூர், தீபக் குப்தா அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது, டெல்லியில் அனைத்து அதிகாரங்களும் என்னிடம் தான் உண்டு. நான் தான் சூப்பர்மேன் என்று சொல்லிக்கொள்ளும் துணை நிலை ஆளுநர் ஏன் குப்பைகளை அகற்ற இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை பணி செய்யவிடாமல் ஆளுநர் தடுப்பதாகக் கூறி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆளுநர் மாளிகையில் 5 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமல்படுத்துவது குறித்த வழக்கை இந்த நீதிமன்றம் விசாரிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து டெல்லியில் இதே நிலைதான் தொடர்ந்து வருகிறது. உடனடியாக ஆளுநர் அதற்காக முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.