This Article is From Jun 07, 2018

'நிர்பயாவுக்கு நடந்தது இனி நடக்ககூடாது'- பெண்கள் பாதுகாப்புக்கு சாதனம்

டெல்லியைச் சேர்ந்த இளைஞர்கள் கண்டுபிடித்த, பெண்களுக்கான புதிய பாதுகாப்பு உபகரணம் 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையை வென்றுள்ளது

'நிர்பயாவுக்கு நடந்தது இனி நடக்ககூடாது'- பெண்கள் பாதுகாப்புக்கு சாதனம்

ஹைலைட்ஸ்

  • புதிய உபகரணத்தின் அளவு 35 மிமீ மட்டுமே
  • இதை வைத்து இருக்கும் இடத்தை துல்லியமாக சொல்ல முடியும்
  • ஐநா நிகழ்ச்சியில் டெல்லி டெக் டீம் விருது வாங்கியுள்ளது

டெல்லியைச் சேர்ந்த இளைஞர்கள் கண்டுபிடித்த, பெண்களுக்கான புதிய பாதுகாப்பு உபகரணம் 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையை வென்றுள்ளது. 

டெல்லி பொறியியல் கல்லூரியில் படித்துவர்கள் மாணிக் மேதா, அவினாஷ் பன்சால் மற்றும் நிகரிகா ராஜீவ். இவர்கள் லீஃப் வியரபல்ஸ் என்ற `டெக்' டீம்-ன் கீழ் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் Safer Pro என்ற பெண்களுக்கான பாதுகாப்பு சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பாதுகாப்பு சாதனம் 35 மில்லி மீட்டர் நீளத்தில் ஓவல் வடிவத்தில் இருக்கும். ஆபத்தில் இருக்கும் பெண்கள் பயன்படுத்தினால், அவர்கள் இருக்கும் இடத்தை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். மேலும், அருகில் இருக்கும் மருத்துவமனை குறித்தும் இந்த சாதனத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். கடந்த 2012 ஆம் ஆண்டு, மருத்துவ மாணவி நிர்பயா கொடூமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொள்ளப்பட்டது நினைவில் இருக்கும். அவர் தான் இந்த புதிய உபகரணத்தைக் கண்டுபிடிக்க லீஃப் வியரபல்ஸ் குழுவுக்கு உந்து சக்தியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், சேஃபர் ப்ரோ சாதனத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. XPrize என்று சொல்லப்படும் மிகவும் மதிப்பு வாய்ந்த பரிசு இந்த டெல்லி இவர்களுக்குக் கிடைத்துள்ளது. நியூ யார்க் நகரில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் விழாவில் இந்த XPrize விருது லீஃப் வியரபல்ஸ் அணிக்கு கொடுத்து கௌரவிக்கப்பட்டு உள்ளது.

XPrize-யை வெல்வது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், `மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் சாதனம் செய்திருந்தால், XPrize-க்கு உடனடியாக விண்ணப்பியுங்கள்' என்று கூறப்பட்டது. இதையடுத்து, 18 நாடுகளில் இருக்கும் 85 குழுக்குள் இந்த பரிசுக்காக விண்ணப்பித்தனர். இதில் இந்த ஆண்டு 5 பேர் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் லீஃப் வியரபல்ஸ் அணி வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த பரிசை வென்ற லீஃப் வியரபல்ஸ் அணி, `நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு பெண்ணின் பாதுகாப்பு எவ்வளவு பெரிய கேள்விக்குறியாக உள்ளது என்பது எங்களைச் சிந்திக்க வைத்தது. அப்போது தான், பெண்கள் பாதுகாப்புக்கு ஏற்றாற் போல ஒரு உபகரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். நிர்பயாவுக்கு நடந்தது வேறு யாருக்கும் நடக்க கூடாது என்று எண்ணினோம். எங்கள் உபகரணம், ஆபத்தில் இருக்கும் ஒரேயொரு பெண்ணை காப்பாற்றினால் கூட போதும்' என்று கூறியுள்ளனர். 

சீக்கிரமே சேஃபர் ப்ரோ, அமேசான் மற்றும் ஃப்லிப்கார்ட் இணைய வர்த்தகங்களில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை, 40 அமெரிக்க டாலருக்குள் நிர்ணயிக்கப்படும் என்று யூகிக்கப்படுகிறது. இந்திய ரூபாயின் மதிப்புப்படி இதன் மதிப்பு 2,400 ரூபாய் இருக்கும்.



(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)

Click for more trending news


.