This Article is From Jul 16, 2018

காவல் நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 17 வயது சிறுமி

போலீஸ் ஸ்டேஷனில் 17 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

காவல் நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 17 வயது சிறுமி
New Delhi:

டெல்லியின் வடக்கு திலக் விஹார் பகுதியில் வசித்து வந்த 17 வயது சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த 21 வயது இளைஞரோடு பழகி வந்தார்.

இதனிடையே, அந்த இளைஞரின் பெற்றோர் அந்த சிறுமியை தங்களது மகனுக்கு மணமுடித்து தருமாறு கேட்டனர். இதை அந்த சிறுமியின் பெற்றோர் மறுத்ததால் இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அந்தப் பெண் மாயமானார். இதுகுறித்து போலீஸில் அந்த சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதனையடுத்து சிறுமி போலீஸ் ஸ்டேஷன்  அழைத்து வரப்பட்டார். ஆனால், அவர் தனது பெற்றோருடன் போக மறுத்துவிட்டார்.

இதனையடுத்து, அவரை காப்பகத்துக்கு அனுப்பி வைக்க போலீஸார் திட்டமிட்டனர். இந்நிலையில், போலீஸ் ஸ்டேஷனின் ஒரு அறையில் தனது துப்பட்டாவில் தூக்கிட்டு அந்தப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அந்தக் காவல்நிலையத்தின் எஸ் ஐ மற்றும் இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

.