இந்த சம்பவத்தில் அந்த காவலர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
New Delhi: டெல்லியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் தப்பிச்செல்ல முயன்றவரை பிடிக்க முயன்ற போது, 2 கி.மீ தொலைவிற்கு கார் பேனட்டில் இழுத்துச்செல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக டெல்லி போலீசார் அளித்த தகவலில், வழக்கமான வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்த போது, எதிர்பக்கமாக வந்த ஒரு காரை போலீசார் நிறுத்துமாறு வழிமறித்துள்ளனர். காரை ஓட்டி வந்த நபரும் வண்டியை நிறுத்துவது போல மெதுவான வேகத்தில் இயக்கியுள்ளார். எனினும், ஒரு சில விநாடிகளில் அந்த கார் வேகமெடுத்தது.
இதையடுத்து, தப்பிக்க முயன்றவரின் காரின் முன்பு பாய்ந்து லாவகமாக பிடிக்க ஒரு காவலர் முயற்சி செய்துள்ளார். காவலர் முன்பு நிற்பதையும் பொருட்படுத்தாத அந்த ஓட்டுநர் காரை மேலும் வேகமாக இயக்குகிறார். இதானல், செய்வதறியாத காவலர் காரின் பேனட்டை பிடித்து தொங்கிய படி, வருகிறார்.
கடந்த நவம்பர் மாதம் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தொடர்ந்து, 2 கி.மீ தூரத்திற்கு உயிரை கையில் பிடித்தபடி, கார் பேனட்டை பிடித்துக்கொண்டு அந்த காவலர் செல்கிறார். இந்த சம்பவம் அனைத்தையும் காரில் இருந்த மற்றொரு சக பயணி தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்கிறார்.
இதையடுத்து, அந்த போலீசார் தன்னை விட்டும்விடும் படி நீண்ட நேரம் கோரிக்கை விடுக்கிறார். ஒருகட்டத்தில், காரை ஒட்டி வந்த அந்த நபர் வண்டியை நிறுத்தி காவலரை இறங்க அனுமதிக்கிறார். பின்னர் சில விநாடிகளில் மின்னல் வேகத்தில் அந்த கார் அங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறது.
இந்த சம்பவத்தில் அந்த போக்குவரத்து காவலர் படுகாயமடைந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.