বাংলায় পড়ুন Read in English
This Article is From Feb 27, 2020

டெல்லி உளவுத்துறை அதிகாரி கொலையில் ஆம் ஆத்மி பிரமுகருக்குத் தொடர்பு? புதிய சர்ச்சை!

Delhi Violence: அந்த வீடியோவில் இருப்பது நகராட்சி கவுன்சிலர் தாஹீர் உசேன் என நம்பப்படுகிறது, அவர் கட்டிடத்தின் மேற்பகுதியில் ஒரு சிலருடன் நின்ற படி, கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபடுகிறார்.

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • டெல்லி ஜாபர்பாத்தில் அங்கித் சர்மா சடலமாக கண்டெடுக்கப்பட்டார்
  • உளவுத்துறை அதிகாரி கொலையில் ஆம் ஆத்மி பிரமுகருக்கு தொடர்பு?
  • ஆம் ஆத்மி பிரமுகர் தாஹீர் உசேன் நகராட்சி கவுன்சிலராக இருந்து வருகிறார்
New Delhi:

வடகிழக்கு டெல்லியில் கடந்த நான்கு நாட்களாக நடந்த கலவரத்தில் உளவுத் துறை அதிகாரி ஒருவர் கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவத்தில் ஆம் ஆத்மி பிரமுகர் தாஹீர் உசேன் என்பவர் பங்கு வகித்ததாகச் சர்ச்சை எழுந்துள்ளது. 

வடகிழக்கு பகுதியில் நடந்த கலவரத்தில் அடித்துக்கொல்லப்பட்ட உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மாவின் உடல் ஜாப்ராபாத் பகுதியில் அங்கித் சர்மாவின் வீட்டின் அருகே உள்ள ஒரு கழிவுநீர் கால்வாயில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, உளவுத்துறை அதிகாரியான அவரது தந்தை ரவீந்தர் சர்மா, ஆம் ஆத்மி பிரமுகர் தாஹீர் உசேனின் ஆதரவாளர்களே தனது மகனைக் கொன்றதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தனது மகன் கடுமையாக தாக்கப்பட்டு பின்னர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார் என்று அவர் கூறியுள்ளார். தொடர்ந்து, அங்கித் சர்மாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

டெல்லி ஜாபர்பாத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அங்கித் சர்மா

Advertisement

இதுதொடர்பாக அங்கித் சர்மாவின் உறவினர்கள் என்டிடிவியிடம் கூறியதாவது, தாஹீர் உசேனுக்கு சொந்தமான 5 மாடிக் கட்டிடத்தில் கற்களும், பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டதாகத் தெரிவிக்கின்றனர். 

இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக அவர்கள் ஒரு சில வீடியோக்களையும் என்டிடிவிக்கு பகிர்ந்துள்ளனர். அதில், இருப்பது நகராட்சி கவுன்சிலர் தாஹீர் உசேன் என நம்பப்படுகிறது, அவர் கட்டிடத்தின் மேற்பகுதியில் ஒரு சிலருடன் நின்ற படி, கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபடுகிறார். ஒரு சில வீடியோக்களில் அவர் கையில் லத்தியுடனும் இருக்கிறார். 

Advertisement

இந்த மோதலில் உசேனின் வீட்டிற்கும் பலத்த சேதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த வீடியோவில், அந்த கட்டிடத்தின் கீழ்ப் பகுதியிலிருந்த கரும்புகை வெளியேறுகிறது. 

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்து ஆம் ஆத்மி பிரமுகர் தனது ட்வீட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், என்னைப் பற்றி வெளிவரும் செய்திகள் தவறானது. கபில் மிஸ்ராவின் வெறுக்கத்தக்கப் பேச்சுக்குப் பின்னரே, டெல்லியில் நிலைமை மோசமடைந்துள்ளது, 

Advertisement

நேற்று முன்தினம் எனது இல்லத்திலும் கல்வீச்சு சம்பவம் நிகழ்ந்தது என்கிறார். மேலும், என் மீது தாக்குதல் நிகழ்த்த எனது வீட்டை உடைத்து அவர்கள் உள்ளே வர முயன்றனர். நான் வீட்டின் மேல்பகுதிக்குச் சென்றுவிட்டதால் அவர்கள் அங்கேயும் வர முயன்றார்கள். 

நான் சம்பவம் குறித்து போலீசாரிடம் விவரித்து எனக்குப் பாதுகாப்பு வழங்கும்படியும் கேட்டுக்கொண்டேன். ஆனால், போலீசார் வருவதற்குத் தாமதமானது. அப்போது, வன்முறையாளர்கள் கலைந்து சென்ற பிறகும் எனக்குப் பாதுகாப்பு வழங்கும்படி போலீசாரிடம் கேட்டுக்கொண்டேன். 

Advertisement

எனினும், அவர்கள் சிறிது நேரம் பாதுகாப்பு அளித்துத் திரும்பிவிட்டனர். அப்போது, வன்முறையாளர்கள் மீண்டும் தாக்குதல் நடத்த முயன்றனர். நடந்த இந்த சம்பவத்தால் நான் மிகவும் மனமுடைந்துள்ளேன். நான் அமைதியை கடைப்பிடிக்கும் ஓர் இந்திய முஸ்லிம். எப்போதும், நாட்டிற்காகவும், இந்து முஸ்லிம் உறவுகளுக்காகவும் உழைப்பவன். என்னை நம்புங்கள் என்று அவர் கூறியுள்ளார். 

இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 18 எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் டெல்லி காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

Advertisement

தலைநகரில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இரண்டு முறையாக நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான ஜாஃபராபாத் பகுதியைப் பார்வையிட்ட பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இன்ஷா அல்லா, இங்கு அமைதி நிலவும் என்று கூறினார்.

Advertisement