This Article is From Mar 05, 2020

டெல்லியில் 2ம் நாள் கலவரத்தில் போலீசாரை விரட்டியடிக்கும் கும்பல்! வைரல் வீடியோ

Delhi violence: வடகிழக்கு டெல்லியின் சாந்த்பாக் பகுதியில் அதிகளவிலான கூட்டம் கூடியதை பார்த்த போலீசார், தங்களை காத்துக்கொள்ள சாலை தடுப்புகளை தாண்டி குதித்து பாதுகாப்பான இடத்திற்கு செல்கின்றனர்.

Delhi violence: பிப்.24ம் தேதி வன்முறையாளர்களால் சுற்றிவளைக்கப்பட்ட போலீசார்.

ஹைலைட்ஸ்

  • டெல்லி கலவரத்தில் போலீசாரை விரட்டியடித்த வன்முறையாளர்கள்
  • 3 நாட்களுக்கும் மேலாக கலவரம் நீடித்தது
  • இந்த வன்முறையில் 48 பேர் உயிரிழந்தனர்.
New Delhi:

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் போலீசாரை சுற்றி வளைத்து தாக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. 

கடந்த பிப்.24ம் தேதி எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், போலீஸ் குழுவினர் மீது நூற்றுக்கணக்கான மக்கள் சாலைகளின் இருபுறமும் இருந்த படி கற்களை வீசி தாக்குதல் நடத்துகின்றனர். அப்போது, கண்ணீர்புகைக்குண்டு பயன்படுத்தப்படுகிறது. இதையடுத்து, மக்கள் கலைந்து செல்கின்றனர். எனினும், சில விநாடிகளில் மீண்டும் ஒன்று கூடிய மக்கள் போலீசாரை தாக்குகின்றனர். 

சாலைகளின் அனைத்து பகுதிகளிலும், போலீசார் செல்ல வழியில்லாமல் தடுக்கப்படுகின்றனர். தொடர்ந்து, அதிகளவிலான கூட்டம் கூடியதை பார்த்த போலீசார், தங்களை காத்துக்கொள்ள சாலை தடுப்புகளை தாண்டி குதித்து பாதுகாப்பான இடத்திற்கு செல்கின்றனர். எனினும், அவர்கள் மீது கற்களும், செங்கல்களும் வீசப்படுகின்றன.

lebgau0o

Delhi violence: போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்ற போலீசாரை அவர்கள் விரட்டியடித்தனர்

மூத்த போலீஸ் அதிகாரி அமித் சர்மா மற்றும் அனுஜ் குமார், தலைமை காவலர் ரத்தன் லால் உள்ளிட்டோர் இந்த வீடியோவில் தென்படவில்லை. எனினும், அந்த சமயத்தில் அவர்கள் அங்கு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த தாக்குதல் நடந்த அன்று தான் தலைமைக் காவலர் ரத்தன் லால் உயிரிழந்தார். 

மற்றொரு வீடியோவில், மூத்த அதிகாரி அமித் சர்மா போலீசாரால் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு அழைத்து வரப்படுகிறார். அப்போது போராட்டக்காரர்கள் கல் வீசுகின்றனர். தொடர்ந்து, அனுஜ் சர்மாவும் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படுகிறார்.  

வடகிழக்கு டெல்லி பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் 48 பேர் உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். வாகனங்கள், கடைகள், வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. 

.