டெல்லி வன்முறையை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். (AFP)
ஹைலைட்ஸ்
- திகில் படத்திற்கு இணையாக இருக்கிறது டெல்லி வன்முறை
- ”ரத்தமும் சதையுமாக” நாட்டின் தலைநகருக்கு பெரும் அவமதிப்பை ஏற்பட்டுள்ளது.
- வடகிழக்கு டெல்லி பகுதியில் இந்த வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தது.
Mumbai: டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்களை பார்க்கும்போது, 1984ஆம் ஆண்டில் சீக்கிய எதிர்ப்பு கலவரத்தின் மோசமான யதார்தத்தை ”திகில் படத்திற்கு” இணையாக சித்தரிப்பதாகவே இருந்தது என சிவசேனா தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ”அன்பின் வெளிப்பாடாக” இந்தியா வருகை தந்திருந்த நேரத்தில், இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவு ”ரத்தமும் சதையுமாக” நாட்டின் தலைநகருக்கு பெரும் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், ரத்தமும் சதையுமாக அமெரிக்க அதிபர் டிரம்பை டெல்லி வரவேற்றுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு டெல்லியில் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்க தவறிவிட்டது என்ற செய்தியை இந்த வன்முறை நமக்கு தெரியப்படுத்துகிறது.
டெல்லியில் வெடித்த இந்த வன்முறையில், மக்கள் சாலைளில் கத்திகளுடனும், துப்பாக்கிகளுடனும் சர்வ சாதாரணமாக வளம் வருகின்றனர். சாலைகள் முழுவதும் ரத்தம் கொட்டி கிடக்கிறது. 1984ஆம் ஆண்டில் சீக்கிய எதிர்ப்பு கலவரத்தின் மோசமான யதார்தத்தை வெளிப்படுத்தும் ”திகில் படத்திற்காக” இணையாக சித்தரிப்பதாகவே இருந்தது.
அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் வெடித்த வன்முறையில் நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டதற்கு பாஜக இன்னும் காங்கிரஸை குற்றம்சாட்டி வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் ஏற்பட்ட தற்போதைய கலவரங்களுக்கு யார் காரணம் என்பதை தெரியப்படுத்த வேண்டும், சில பாஜக தலைவர்கள் பயன்படுத்தும் அச்சுறுதல்கள் மற்றும் எச்சரிக்கைகளின் வெளிப்பாடு என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்திய நேரத்தில் நாட்டின் தலைநகர் பற்றி எரிந்தது என சிவசேனா தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவுக்கு வந்த நேரத்தில் இந்த கலவரம் நடந்திருப்பதால், இது திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என்று அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிபர் டிரம்பிடம் கேட்டபோது, “அது குறித்து நான் பிரதமர் நரேந்திர மோடியிடம் விவாதிக்கவில்லை. ஆனால், இந்தப் போராட்டங்களை அணுகுவது குறித்து இந்தியாதான் முடிவெடுக்க வேண்டும்,“ என்று கூறினார்.