டெல்லி சட்டமன்ற குழு புகார் தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண்ணை வெளியிட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- வன்முறையை தடுக்க டெல்லி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை
- சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் பதிவுகள் குறித்து புகார் அளிக்கலாம்
- புகாருக்கு, வாட்ஸ்ஆப் எண்:8950000946 இமெய்ல் dvscommittee@delhigov.in
New Delhi: வெறுப்பை, வன்முறையைத் தூண்டும் பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பார்த்தால் அதுபற்றி புகார் அளிக்கலாம் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வாட்ஸ்ஆப் எண் மற்றும் மின்னஞ்சலையும் டெல்லி அரசு வெளியிட்டிருக்கிறது.
சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதில் வன்முறையைத் தூண்டும் பதிவுகளும் கணிசமாக உயர்ந்துள்ளன. இவை பகிரப்பட்டால் நிலைமை இன்னும் தீவிரம் அடைந்து விடுகிறது.
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் வன்முறையைத் தூண்டும் பதிவுகளைப் பார்த்தால் புகார் அளிக்கலாம் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேட்டியளித்த ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.வும், டெல்லி சட்டமன்றத்தின் அமைதி மற்றும் நல்லிணக்க கமிட்டியின் தலைவருமான சவுரப் பரத்வாஜ், 'சமூக வலைத்தளங்களில் வன்முறையை, வெறுப்பைத் தூண்டும் பதிவுகளைப் பார்த்தால் 89500 00946 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கோ அல்லது பீஸ்sநீஷீனீனீவீttமீமீ@பீமீறீலீவீரீஷீஸ்.வீஸீ என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ புகார் அளிக்கலாம்' என்று தெரிவித்துள்ளார்.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியின் 6 சட்டமன்றத் தொகுதிகளில் வியாழக்கிழமை நல்லிணக்க கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், உள்ளூர் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.