வியாழக்கிழமை வரை சராசரியாக அதிகபட்ச வெப்பநிலை 19.85 டிகிரி செல்சியஸ் பதிவானது.
New Delhi: டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு வெப்ப நிலை 4.2 டிகிரி செல்ஸியஸாக குறைந்துள்ளது.
டெல்லியில் குளிர்ந்த அலை தொடர்ந்து வீசுகிறதது. டெல்லியில் வெப்பநிலை 4.2 டிகிரி செல்ஸியாகவும் அதிகபட்ச வெப்பநிலை 13.4 டிகிரி செல்ஸியசாகவும் பதிவாகியுள்ளதாக ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது. வெப்பநிலை மேலும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் 1997 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த நகரம் குளிரைக் கண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நகரத்தின் பல பகுதிகள் டிசம்பர் 14 முதல் தொடர்ச்சியாக 13 நாட்கள் அதிகமான குளிரினை கண்டுள்ளது. 1997 ஆம் ஆண்டில் 17 நாட்களில் இந்த அளவுக்கு குளிர் பதிவானது.
வெப்ப நிலை 4.2 டிகிரி அளவுக்கு பதிவாகியுள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். டிசம்பர் 31 வரை வெப்பநிலை 19.15டிகிரி செல்சியஸாக குறையும் என்று வானிலை ஆய்வுத் தலைவர் குல்தீப் ஶ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை வரை சராசரியாக அதிகபட்ச வெப்பநிலை 19.85 டிகிரி செல்சியஸ் பதிவானது.
டெல்லி மட்டுமல்ல நொய்டா, காஜியாபாத், ஃபரிதாபாத் மற்றும் குருகிராம் ஆகிய பகுதிகளும் குளிரின் பிடியில் சிக்கியுள்ளன.