டெல்லியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு, போக்குவரத்து நெரிசல்!
New Delhi: டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள அண்டை பகுதிகளான காசியாபாத் மற்றும் நொய்டாவில் இன்று காலை பெய்த கனமழையால் வெப்பநிலை குறைந்து, மக்களுக்கு சற்று நிவாரணம் கிடைத்தது.
டெல்லி மற்றும் குர்கானில் பெய்த மழை காரணமாக அந்த பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சில பகுதிகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
டெல்லியில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.
நகரின் முக்கிய சாலைகள் நீரில் மூழ்கியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லி போக்குவரத்து போலீசார் தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள தகவலின்படி, அரேபிய கடலில் இருந்து தென்மேற்கு மற்றும் வங்காள விரிகுடாவிலிருந்து தென்கிழக்கு பகுதியில் ஈரப்பதத்தை அளித்து வருகின்றன.
மழைக்கு பின்னர் டெல்லியில் மேகமூட்டமாக வானிலை காணப்பட்டது.
இன்று காலை டெல்லியில் மழை பெய்யும்போது எடுத்த படம்.
டெல்லியில் இருந்து 200 கி.மீ தூரத்தில் உள்ள உத்தரப்பிரதேச ஆக்ராவில், நேற்றிரவு பெய்த மழையால் பழமையான வீடு இடிந்து விழுந்தது.
குருகிராம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குருகிராம் போக்குவத்து நெரிசல்.
நகரத்திற்கான பிரதிநிதித்துவ புள்ளிவிவரங்களை வழங்கும் சஃப்தர்ஜங் ஆய்வகம், ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 139.2 மி.மீ மழையைப் பதிவாகியுள்ளதாகவும், இது ஆகஸ்ட் மாதத்தில் பதிவு செய்ய வேண்டிய 157.1 மி.மீ. மழையை விட 11 சதவீத குறைவாக பதிவாகியுள்ளது.
ஒட்டுமொத்தமாக, இதுவரை 457.8 மிமீ மழை பதிவாகியுள்ளது, இது ஜூன் 1ம் தேதி பருவமழைக்காலம் தொடங்கிய போது 433.2 மிமீ அளவாக இருந்ததை விட ஆறு சதவீதம் அதிகமாகும்.
டெல்லி மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று நள்ளிரவு ட்வீட்டில் ஸ்கைமெட் வானிலை தெரிவித்துள்ளது.