குற்றம்சாட்டப்பட்டுள்ள பெண் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார், தொடர்ந்து விசாரணைகள் நடந்து வருகிறது.
New Delhi: டெல்லியில் பெண் ஒருவர் தன்னை திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து டெல்லி போலீசார் கூறும்போது, கடந்த ஜூன் 11ஆம் தேதியன்று, தனது காதலனுடன் அந்த பெண் இருசக்கரத்தில் சென்றுள்ளார். அப்போது, தலையில் ஹெல்மெட் அணிந்திருந்த காதலனிடம் அதனை கலட்ட வலியுறுத்திய அந்த பெண், சிறிது நேரத்தில் அவர் முகத்தில் ஆசிட்டை வீசியுள்ளார்.
இதுதொடர்பாக, ஆசிட் வீச்சு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல் நிலையத்திற்கு அழைப்பு வந்தது. இதையடுத்து, மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது, அந்த பெண்ணிற்கு கையில் மட்டும் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டிருந்தது. அவரது காதலனுக்கு, முகம், மார்பு, கழுத்து உள்ளிட்ட இடங்களில் கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளது.
யார் இந்த தாக்குதலில் ஈடுபட்டது என்பது பல நாட்களுக்கு எங்களுக்கு தெரியாமல் இருந்தது. ஏனெனில், இருவரும் தாங்கள் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, மர்மநபர்கள் தங்கள் மீது ஆசிட் வீசியதாகவே தெரிவித்தனர். ஏனினும், போலீசார் விசாரணையில் தனது காதலி ஹெல்மெட்டை கழட்ட கூறியதை காதலன் கூறியுள்ளார்.
இதையடுத்து, போலீசார் அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், காதலர்கள் இருவரும் 3 வருடமாக காதலித்து வந்துள்ளதாகவும், ஆனால், சமீபத்தில் தன்னை திருமணம் செய்ய காதலன் மறுத்துள்ளார். இதில் கோபமடைந்த அந்த பெண், தன் காதலனை பழிவாங்கும் நோக்கில் இதுபோன்று ஆசிட் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.