Skymet மற்றும் IQ Air Visual என்ற நிறுவனங்கள் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளன.
New Delhi: உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லியை வானிலை முன்னறிவிப்பு நகரமான ஸ்கைமெட் SKYMET அறிவித்துள்ளது. காற்று மாசு டெல்லியில் அதிகரித்திருக்கும் நிலையில் இந்தியாவின் தலைநகருக்கு இப்படியொரு பெயர் கிடைத்திருக்கிறது.
டெல்லியை தவிர்த்து மற்ற இந்திய நகரங்களான கொல்கத்தா, மும்பை ஆகியவை உலகின் மாசுபட்ட நகரங்களில் முதல் பத்து இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன.
தலைநகரில் காற்று மாசைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும், அவற்றுக்கு போதிய பலன் கிடைக்கவில்லை. டெல்லி மாசு பிரச்னைக்கு தீர்வுகாண நாடாளுமன்ற கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் அரியானாவில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதால் எழும்புகை டெல்லியை சூழ்ந்திருப்பதன் காரணமாகவே, டெல்லியில் காற்று மாசடைந்திருப்பதாக மாநில அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
இந்த நிலையில்தான் Skymet நிறுவனம் மாசடைந்த நகரங்களில் உலகிலேயே டெ ல்லி முதலிடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனம் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது -
காற்று மாசு அளவு 527 புள்ளிகளைப் பெற்று உலகின் மாசடைந்த நகரங்களில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் 234 புள்ளிகளுடன் பாகிஸ்தானின் லாகூர், தாஷ்கன்ட், கராச்சி, கொல்கத்தா, செங்டூ, ஹனோய், குவாங்சு, மும்பை, காத்மாண்டு நகரங்கள் உள்ளன.
இவ்வாறு ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
காற்று மாசை Air Quality Index என்ற அளவால் சுருக்கமாக AQI என்று குறிப்பிடுகிறோம். இதன் அளவு 0 - 50 புள்ளிகள் இருந்தால் சிறப்பானது என்றும், 51 - 100 இருந்தால் போதுமானது என்றும், 101 - 200 என இருந்தால் காற்று சற்று மாசடைந்துள்ளது என்றும், 301 - 400 என இருந்தால் காற்று மாசடைந்துள்ளது என்றும், 401 - 500 என இருந்தால் காற்று கடுமையாக மாசடைந்ருதள்ளது என்றும் அர்த்தம் கொள்ளலாம்.