Read in English
This Article is From Nov 16, 2018

காற்று மாசு நிலை அறிக்கை; 'மோசமான' நிலையில் தொடரும் டெல்லி!

‘மிகவும் மோசமான’ நிலையில் இருந்த டெல்லி வானிலையில் காற்று மாசுபாடு சற்றே குறைந்துள்ளது.

Advertisement
இந்தியா

வானம் தெளிந்தே காணப்படுமென அறிவித்த இந்திய வானிலை ஆய்வு மையம்

New Delhi:

கடந்த வியாழக்கிழமையன்று மிகவும் பனிமூட்டமாக  டெல்லி காணப்பட்ட நிலையில். தற்போது பனிப்பொழிவு குறைந்துள்ளது. சுமார் 14.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு பனிப்பொழிவு குறைந்ததால் ஆறுதலாக உள்ளதென வானிலை மையம் சார்பாக தெரிவிக்கப்பட்டது.

காற்றின் தன்மை மற்றும் வானிலை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் ‘சாவார்' (SAFAR- System of Air Quality and Weather Forecasting And Research) டெல்லியில் உள்ள காற்று மாசுபாட்டை கண்கானித்து வரும் நிலையில் இந்த பதிவை வைத்து அது ‘மோசமான' நிலையை விட  கடந்து இரண்டு நாட்களாக சற்றே முன்னேறியுள்ளதாக  கூறியுள்ளன‌ர். 

இதற்கு முன்னர் ‘மிகவும் மோசமான' நிலையில் இருந்த டெல்லி வானிலையில் காற்று மாசுபாடு சற்றே குறைந்துள்ளது. காற்று மாசுபாட்டை தொகுதிவாரியாக பிரிக்கும் போது சந்தினி சவொக் ‘மோசமான' நிலையில் இருப்பதாக  கூறியுள்ளனர்.

Advertisement

‘சாவார்' ஆராய்ச்சி மையம், காற்று மாசுபாட்டினால் மக்களுக்கு சுவாசப் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதாகவும், மேலும் டெல்லியில் மாசுபாடு இப்படியே தொடர்ந்தால் குழந்தைகள் மற்றும் முதியவர்க்களுக்கு அது அதிக‌ பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்களது அறிக்கையில் தெரிவித்தனர்.

‘இன்று வானம் தெளிந்தே காணப்படுமென‌' இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிக்கை சமர்பித்தனர்.

மேலும் இன்று அதிக படியாக 26 டிகிரி வெயில் அடிக்க வாயிப்புள்ளதாகவும், காற்றில் ஈரப்பதம் 70% இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.நேற்று அதிகபட்சமாக 27.5 டீகிரிகளை தட்ட வெப்பம் குறைந்தபட்சமாக 16.2  டிகிரிகளாக உள்ளது. மேலும் தற்போதுள்ள பனிக்காலத்தின் பனிப்பொழிவு 3 மடங்கு அதிகரித்துள்ளது.

Advertisement
Advertisement