This Article is From Aug 17, 2020

பாஜகவில் இணைந்தனர் ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள்!

டெல்லி சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக அரசியல் முக்கியத்துவம் பெற பாஜக, டெல்லி போலீசாருடன் சதி செய்து ஷாஹீன் பாக் ஆர்ப்பாட்டத்தை திட்டமிட்டதாக ஆம் ஆத்மி கட்சி இப்போது கூறுகிறது.

50 க்கும் மேற்பட்ட ஷாஹீன் பாக் ஆர்வலர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

New Delhi:

தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தேசிய தலைநகர் டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் 24 மணி நேரமும் 101 நாள் தொடர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களில்  50 க்கும் மேற்பட்டோர், பாஜகவில் சேர்ந்துள்ளனர். 

சமூக சேவகர் ஷாஜாத் அலி, மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் மெஹ்ரீன் மற்றும் முன்னாள் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகி தபாசம் உசேன் ஆகியோர் பாஜகவில் இணைந்துள்ளனர். இவர்கள் ஷாஹீன் பாக் நன்கு அறியப்பட்ட முகங்களாக இருந்தனர்.

டெல்லி சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக அரசியல் முக்கியத்துவம் பெற பாஜக, டெல்லி போலீசாருடன் சதி செய்து ஷாஹீன் பாக் ஆர்ப்பாட்டத்தை திட்டமிட்டதாக ஆம் ஆத்மி கட்சி இப்போது கூறுகிறது.

“ஷாஹீன் பாக் எதிர்ப்பு பாஜகவின் முக்கிய தேர்தல் பிரச்சினையாக இருந்தது. ஷாஹீன் பாக் போராட்டங்களின் அமைப்பாளர்கள் பாஜகவுடன் இணைந்துள்ளதால் பாஜக இப்போது அம்பலமாகியுள்ளது.” என்று ஆம் ஆத்மி கட்சியின் சவுரப் பரத்வாஜ் கூறியுள்ளார். “பாஜகவின் அறிவுறுத்தலின் பேரில் ஷஹீன் பாக் எதிர்ப்பாளர்களை தில்லி காவல்துறை நீக்கவில்லை.” என்று பரத்வாஜ் என்.டி.டி.வி யிடம் கூறியிருந்தார்.

இந்நிலையில் “இது சீலம்பூர், ஜாமியா அல்லது ஷாஹீன் பாக் என இருந்தாலும், CAA க்கு எதிராக பல போராட்டங்கள் நடந்துள்ளன. இந்த ஆர்ப்பாட்டங்கள் ஒரு தற்செயல் நிகழ்வு என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அது இல்லை. இது எல்லாம் அரசியலில் வேரூன்றிய ஒரு சோதனை. இது ஒரு சட்டத்தைப் பற்றி இருந்தால், அது முடிவடைந்திருக்கும்.” என முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருந்தார்.

அவரது அமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்களிடமிருந்து வெறுக்கத்தக்க உரைகளின் ஒரு சரம் இருந்தது, அதன் பின்னர் வடகிழக்கு டெல்லியை வன்முறை தாக்கியது, அதில் 53 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்களாவார்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் போராட்டக்காரர்களிடையே மோதல்களாக வன்முறை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

.